AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரபல நடிகரின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் நடிகை கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh is set to perform a special dance number | தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருஅப்வர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் பிரபல நடிகரின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகரின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2026 16:45 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் நாயகியாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நாயகன்களுக்கு ஜோடியாக பலப் படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து நாயகன்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இறுதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் ரிவால்வர் ரீட்டா. தமிழ் சினிமாவில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ஐப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பலப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் படங்கள் வெளியாக உள்ளது.

நானி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் நடிகை கீர்த்தி சுரேஷ்:

அதன்படி சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி நடிகர் நானியின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் நானியின் நடிப்பில் தற்போது தி பாரடைஸ் என்ற படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அந்தப் படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு பாடலுக்கு ஆட உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மேலும் படம் வெளியாகும் போதே இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவரும்.

Also Read… ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது – கே.வி.என். வெங்கட் நாராயணன்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லக்கி பாஸ்கர் 2 படம் வருமா? வராதா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

Follow Us