அன்பரே என் வழியில் சேர்ந்தவரே… குலு குலு படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்தது
4 Years Of Gulu Gulu | நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் குலு குலு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது நிலையில் அதனை இயக்குநர் கொடாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ரத்னகுமார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் 29. இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் குலு குலு. கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று படத்தின் இயக்குநர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.




குலு குலு படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்தது:
இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, யாராவது ‘குலு குலு’ (Gulu Gulu) தங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்று சொல்லும்போது என் மனம் நெகிழ்ந்துபோகிறது. குறிப்பாக, இப்படம் வெளியான பிறகு, ‘மேயாத மான்’ (Meyaadha Maan) படத்தை விட இதையே பலர் விரும்புவதையும் குறிப்பிடுவதையும் என்னால் காண முடிகிறது. மிகுந்த அன்பை உணர்கிறேன். நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அளித்து என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி, சந்தானம் அண்ணா என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
அன்பரே
பேருந்திலே பாட்டிவரே..
அன்பரே
சன்னல் வழி காற்றிவரே..Whenever someone tells me #GuluGulu as their favorite. My heart melts 🫠. Especially post the release of #29Thefilm i was able to see lot of people mentioning and liking this film more than… pic.twitter.com/vWc9Rs19t7
— Rathna kumar (@MrRathna) July 29, 2026
Also Read… லோகேஷ் – அல்லு அர்ஜுனின் படத்தில் நாயகிக்கு முக்கியதுவம் இல்லையா? வைரலாகும் தகவல்