கூலி படத்தின் மீதான விமர்சனம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்
Rathna Kumar talks about the Coolie movie Criticism : தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்திற்கு கிடைத்த விமர்சனம் குறித்து இயக்குநர் ரத்ன குமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்களான நடிகர்கள் நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ் மற்றும் அமீர் கான் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரச்சிதா ராம், கண்ணா ரவி, காளி வெங்கட், திலீபன், மாறன், சார், ரெபா மோனிகா ஜான், மோனிகா ப்ளெசி, பாபுராஜ், தமிழ் மற்றும் ரிஷிகாந்த் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்த இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்ப்பில் இருந்தனர். படம் வரவேற்பைப் பெற்றாலும் ஒரு பக்கம் நெகட்டிவான விமர்சனமும் கிடைத்தது. இது குறித்து லோகேஷ் கனகராஜின் நண்பர் ரத்னகுமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கூலி படத்தின் மீதான விமர்சனம் குறித்து ரத்னகுமார் விளக்கம்:
ரத்னகுமார் பேசியதாவது, பழைய பாடல்கள், சிறப்புத் தோற்றங்கள், பல நட்சத்திரங்கள் நடிக்கும் படம் போன்ற லோகேஷின் வழக்கமான பாணிகள் அனைத்தும் இருந்தன. ஆனால், ‘லியோ’ படத்தில் வந்த ‘நரபலி’ பிரச்சினையைப் போலவே, இங்கேயும் ‘சடலத்தை அப்புறப்படுத்தும்’ யோசனை விசித்திரமாக இருந்தது.
லோகேஷ் ஒரு நாற்காலியைக் கொண்டு அதைச் சாதாரணமாகக் காட்ட முயன்றார். நான் அவரிடம், இந்தப் படத்தில் அவருக்கே உரிய அம்சங்கள் அனைத்தும் உள்ளன, ஆனால் அது போதாது, மக்கள் அவரிடமிருந்து இதைவிடச் சிறந்த ஒன்றை எதிர்பார்ப்பார்கள் என்று சொன்னேன்.
‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்கள் சிறப்புத் தோற்றங்களையும் பழைய பாடல்களையும் வழக்கமான ஒன்றாக உணர வைத்தன, அதனால் அது சலிப்பை ஏற்படுத்தியது. லோகேஷ் தனது சம்பளத்தைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசினார். நான் இந்தப் படத்தை ஒரு வெளியாளின் கண்ணோட்டத்தில் பார்த்தபோது, எதிர்மறை எண்ணங்கள் மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… நடிகர் அபிஷன் ஜீவிந்த் உடன் நடிக்கும் பிரபல கன்னட நடிகர்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் ரத்னகுமார் பேச்சு:
#Rathnakumar about #Coolie Criticisms:
• Lokesh’s usual tropes like old songs, cameos, and a multistarrer setup were all there.. But just like the “Narabali” issue in LEO, the “body disposal* idea here felt strange..
• Lokesh tried to underplay it with a chair. I told him… pic.twitter.com/xaqFPeqV5h
— Laxmi Kanth (@iammoviebuff007) May 2, 2026