நடிகர் அபிஷன் ஜீவிந்த் உடன் நடிக்கும் பிரபல கன்னட நடிகர்? வைரலாகும் தகவல்
Abishan Jeevinths Next Movie Update: இயக்குநராகவும், நடிகராகவும் ஹிட் படங்களை கொடுத்த அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக நடிக்கும் படத்தில் பிரபல கன்னட நடிகர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்தப் படம் தான் இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சீரியசான கதையை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எடுத்து இருந்தார். மேலும் இந்த சமூகத்தில் மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்று வரும் நிலையில் அவ்வளவு மோசம் இல்லை மனிதர்கள். அவர்களிலும் நல்ல மனசு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் படம் முழுக்க அத்தனை நபர்கள் நல்லவர்களாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தனர். இது படம் பார்த்தவர்களுக்கு ஒரு பாசிட்டிவான உணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் படத்தை இயக்காமல் நாயகனாக நடித்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது. அதன்படி வித் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் அபிஷன் ஜீவிந்த். தொடர்ந்து இந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.




நடிகர் அபிஷன் ஜீவிந்த் உடன் நடிக்கும் பிரபல கன்னட நடிகர்?
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அபிஷன் ஜீவிந்த் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அவர் நடிக்கும் படம் குறித்த தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் கசிந்து வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் அபிஷன் ஜீவிந்த் தற்போது நடிக்கும் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது தந்தை மகன் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த் – ரிலீஸ் எப்போது தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Abhishan‘s Next film as Actor🌟🔥
Also #Shivarajkumar plays a pivotal role in the film. A Father – Son based film♥️
Produced by BalaMurugan who previously worked as EP in GoodNight, Lover & TouristFamily🎬 pic.twitter.com/HqXwoKgC4W— AmuthaBharathi (@CinemaWithAB) April 30, 2026
Also Read… கர படத்திற்கு தனுஷ் கொடுத்த ஹைப் ஒர்க் ஆனதா? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ