AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்வு உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்போது, ​​தேர்வை யார் தீர்மானிக்கிறார்கள்? அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது எக்ஸாம் இணையதள தொடர்!

Exam The System Exposed Web Searies Will Stream On Amazon Prime Video: தொடர்ந்து சினிமாவில் புதுப் படங்கள் வெளியாவது போல ஓடிடியிலும் படங்களும் இணையதள தொடர்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி அமேசான் ப்ரைம் வீடியோவில் தற்போது வெளியாக உள்ளது.

தேர்வு உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்போது, ​​தேர்வை யார் தீர்மானிக்கிறார்கள்? அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது எக்ஸாம் இணையதள தொடர்!
எக்ஸாம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Apr 2026 20:06 PM IST

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை பார்த்து பழகிய நமது மக்களுக்கு ஓடிடியில் எந்த குறையும் இல்லாமல் வெளியாகிறது வெப் சீரிஸ். சில இணையதள தொடர்கள் குறைந்தது 7 முதல் அதிகப்பட்சமாக பல எபிசோடுகள் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பல மொழிகளில் உருவாகு இணையதள தொடர்களை தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு பல தொடர்கள் வெளியாகி வருகின்றது. இதன் காரணமாக மற்ற மொழிகளில் உள்ள கலாச்சாரத்தை தமிழ் மக்கள் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. இதில் தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் அதிக அளவில் கொரியன் ட்ராமா இணையதள தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மக்களிடையே உங்களுக்கு எந்த தொடர் பிடிக்கும் என்று கேட்டால் அவர்கள் அதிக அளவில் கொரிய மொழி தொடர்களையே கூறுவார்கள்.

மேலும் மற்ற மொழி இணையதள தொடர்கள் தமிழில் டப் செய்வது மட்டும் இன்றி நேரடியாக தமிழ் மொழியில் பல இணையதள தொடர்கள் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் மொழியில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ள இணையதள தொடரை பார்க்கலாம்.

அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது எக்ஸாம் இணையதள தொடர்:

அதன்படி தமிழ் மொழியில் தற்போது உருவாகி உள்ள தொடர் எக்ஸாம். இந்த தொடரை இயக்குநர் எ.சர்குணம் இயக்கி உள்ள நிலையில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி இந்த தொடரை தயாரித்து உள்ளனர். நடிகர்கள் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா காஷ்யப் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த தொடர் வருகின்ற மே மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Kara Movie: கடைசி நேரத்தில் தனுஷின் கர படத்திற்கு வந்த சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனு!

அமேசார் ப்ரைம் வீடியோ வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Ayyanar Thunai: லண்டனுக்கு டூர் சென்ற அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா – அழகிய போட்டோஸ் இதோ!

Follow Us