AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டரில் போடாததற்கு இதுதான் காரணம் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு

Karuppu Movie Release Date Did Not In Posters: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை ஏன் போஸ்டர்களில் பதிவிடவில்லை என்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி கலகலப்பாக பேசியுள்ளார்.

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டரில் போடாததற்கு இதுதான் காரணம் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Apr 2026 13:26 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது நடிப்பில் வெளியான காமெடி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் காமெடி நடிகராக நடித்தப் போது கிடைத்த வரவேற்பைப் போல இவர் நாயகனாக நடித்த போதும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் அறிமுகம் ஆனார். இவர் இயக்கி நாயகனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. தொடர்ந்து தான் நாயகனாக நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது மற்ற நடிகர்களின் படங்களையும் இயக்கி வருகிறார்.

அதன்படி இவர் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்திற்காக இயக்குநர்.ஆர்.ஜே.பாலாஜி தனது கடின உழைப்பை கொடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கருப்பு படம் தொடர்பாக தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டரில் போடாததற்கு இதுதான் காரணம்:

அதன்படி கருப்பு படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, ஏன் போஸ்டர்களில் ரிலீஸ் தேதி போடவில்லை என்று ரசிகர்கள் கேட்கிறார்கள், ஆனால் அதனை செய்தால் சென்சார் போர்டு ஒரு குத்து குத்துராங்க. சீக்கிரம் போடுவோம்.
பட்டாசு எடுத்து வைங்க, பண்டிகை வர போகுது மே 14 என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… தலைவர் 173 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… மே மாத ரிலீஸை குறிவைக்கும் நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம்

Follow Us