AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோயம்புத்தூர் மக்களே ரெடியா? கர படக்குழு சொன்ன குட் நியூஸ்

Actor Dhanush Kara Movie Event: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கர. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று கோயம்புத்தூரில் பிரிவியூ நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூர் மக்களே ரெடியா? கர படக்குழு சொன்ன குட் நியூஸ்
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Apr 2026 10:34 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம வருபவர் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் பல நெகட்டிவான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் அடையாளமாக நடிகர் தனுஷ் உள்ளார். மேலும் நடிப்பது மட்டும் இன்றி படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். தனுஷ் நாயகனாக நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றதோ அதே போல அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் முதலாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார்.

ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த கர படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கோயம்புத்தூர் மக்களே ரெடியா?

மேலும் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்ஷனல் சார்பாக தயாரித்து இருந்தார். மேலும் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று படத்தின் ப்ரிவியூ நிகழ்ச்சி கோயம்புத்தூரில் உள்ள ப்ரோசோன் மாலில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read… நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 படம் எப்படி இருக்கும்? ஷூட்டிங் எப்போது தெரியுமா- இயக்குநர் ரத்னகுமார் அப்டேட்!

Follow Us