AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 ஆண்டுகளைக் கடந்தது பிரித்விராஜ் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜன கண மன படம்!

4 Years Of Jana Gana Mana: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஜன கண மண படம் தற்போது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

4 ஆண்டுகளைக் கடந்தது பிரித்விராஜ் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜன கண மன படம்!
ஜன கண மன படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Apr 2026 20:42 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜன கண மன. இந்தப் படம் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜன கண மன. இந்தப் படத்தை இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கி உள்ள நிலையில் ஷாரிஸ் முகமது இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, பசுபதி ராஜ், ஜி.எம்.சுந்தர், மம்தா மோகன்தாஸ், ஸ்ரீ திவ்யா, ஷாரி, பிரியங்கா நாயர், வைஷ்ணவி வேணுகோபால், வின்சி அலோஷியஸ், சித்ரா ஐயர், இளவரசு, ஷம்மி திலகன், ராஜா கிருஷ்ணமூர்த்தி, துருவன், ஹரிகிருஷ்ணன், ஷானவாஸ், மிதுன் வேணுகோபால், ஜோசுக்குட்டி ஜேக்கப், தன்யா அனன்யா, திலீப் கே.மேனன், வினோத் சாகர், ராஜ் பால், டிஜோ ஜோஸ் ஆண்டனி, பிஜின் கே. பேபி, ஆனந்த் பால், சாகர் சூர்யா, ஜிஃபின் ஜார்ஜ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

4 ஆண்டுகளைக் கடந்தது ஜன கண மன படம்:

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு கொலை வழக்கில் வழக்கறிஞராக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். கோர்ட் ரூம் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது 4 ஆண்டுகளை கடந்துள்ளதை கொண்டாடும் விதமாக இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… SIAA: தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் – நடிகர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி!

இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையாளம் டூ தமிழ்.. இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுவன் யாருனு தெரியுமா? ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய முழுவதும் பிரபலமானவர்!

Follow Us