Rishabh Shetty: யூத் பட வெற்றி… கென் கருணாஸை நேரில் அழைத்து பாராட்டிய ரிஷப் ஷெட்டி..!
Rishab Shetty praise Ken Karunaas: சினிமாவில் சிறப்பான இயக்குநர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் ஏற்கனவே யூத் படம் மற்றும் கென் கருணாஸை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான பதிவை கென் கருணாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையரங்குகளில் கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியான, சிறு பட்ஜெட் திரைப்படம்தான் யூத் (Youth). இப்படத்தை கென் கருணாஸ் (ken Karunaas) இயக்கி நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கென் கருணாஸ் ஏற்கனவே சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் (Dhanush) இயக்கும் மற்றும் நடிக்கும் திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவந்தவர். அந்த வகையில் இந்த யூத் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் இயக்குநராகவும், நாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் கென் கருணாஸ் பள்ளி மாணவனாக நடிக்க, சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu), தேவதர்ஷினி (Devadarshini), அனிஷிமா அனில்குமார் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படக்குழுவை சிலம்பரசன், சூர்யா மற்றும் கார்த்தி போன்ற பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டியிருந்தனர்.
மேலும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவை வெளியிட்டிருந்தார்.அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான கென் கருணாஸை நேரில் அழைத்து, அவர் வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான பதிவை கென் கருணாஸ் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: மக்களே ரெடியா?… முடிவடைந்தது டிசி படத்தின் ஷூட்டிங் – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
ரிஷப் ஷெட்டி நேரில் அழைத்து பாராட்டியது குறித்து கென் கருணாஸ் வெளியிட்ட பதிவு:
Met @shetty_rishab Sir… and something inside me just said “You can make it , keep going” 🤍🥹
Thank you “ Youth “ for making my dreams come true ⭐️
Kadavuluku nandri ✨ pic.twitter.com/40AktlCMQJ
— Ken Karunaas (@KenKarunaas) April 27, 2026
அந்த பதிவில் கென் கருணாஸ், ரிஷப் ஷெட்டி தன்னிடம், “என் உள்ளுணர்வு சொன்னது, “உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்” என கூறினார். என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வையலாகபரவிவருகிற்து.
இதையும் படிங்க: இன்று முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை? வைரலாகும் தகவல்
கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான யூத் திரைப்படமானது, காமெடி, எமோஷனல், பள்ளிப்பருவ காதல் என அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படம் அமைந்திருந்தது. இப்படத்தில் மொத்தம் 3 நடிகைகள் நடித்திருந்த நிலையில், சிறப்பாக அமைந்திருந்தது. ஒரு மிடில்கிளாஸ் குடும்பத்தில் கஷ்டங்கள் மற்றும் அப்பா மகனின் சண்டை என ஒரு வித்தியாசமான படமாக இது அமைந்திருந்தது. அந்த வகையில் திரையரங்குகளில் இப்படமானது கிட்டத்தட்ட ரூ 85 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த வகையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.