AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mehreen Pirzada: பட்டாஸ் பட நடிகைக்கு திருமணம்.. காதலனை கரம்பிடித்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா!

Mehreen Pirzada Wedding: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தமிழில் தனுஷின் பட்டாஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். வர தனது நீண்டநாள் காதலரான அர்ஷ் அவுலாக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

Mehreen Pirzada: பட்டாஸ் பட நடிகைக்கு திருமணம்.. காதலனை கரம்பிடித்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா!
மெஹ்ரீன் பிர்சாடா திருமணம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Apr 2026 14:48 PM IST

தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா (Mehreen Pirzada). இவர் தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் அதிகம். கடந்த 2017ம் ஆண்டில் சந்தீப் கிஷன் (Sandeep Kishan) மற்றும் விக்ராந்த் (Vikranth) நடித்திருந்த, “நெஞ்சில் துணிவிருந்தால்” (Nenjil Thunivirundhal) என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக நுழைந்தார். இப்படத்தில் ரயிலாராரோ என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்திருந்தார். இதையடுத்து தனுஷின் (Dhanush) பட்டாஸ் (Pattas) என்ற படத்தில், சாதனா ஷாஷா என்ற வேடத்தில் நகைச்சுவையாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த வகையில் இவர் சில ஆண்டுகளாக தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் அர்ஷ் அவுலாக் (Arsh Aulakh) என்பவரை நீண்டநாளாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 2026 ஏப்ரல் 26ம் தேதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளனர்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அவரின் காதல் கணவரான அர்ஷ் அவுலாக்வுடன் இருக்கும், திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: என் கணவர் எப்டியாது ஜெயிக்கணும்னு உருகுற மனசு தான் கடவுள் – தனுஷ் பேச்சு

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா வெளியிட்ட திருமணம் தொடர்பான புகைப்பட பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by MEHREEN 🌟🧿 (@mehreenpirzadaa)

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா இறுதியாக தமிழில் இந்திரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஹீரோவாக வசந்த் ரவி நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மெஹ்ரீன் பிர்சாடா நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. முழுவதுமாக தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் நடிக்கும் ஆர்வம் காட்டிவரும் நிலையில், தனது காதலரான அர்ஷ் அவுலாக் என்பவரை, 2026 ஏப்ரல் 26ம் தேதியில் திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டரில் போடாததற்கு இதுதான் காரணம் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு

மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமணமானது நடைபெற்றிருந்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் திருமண புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. மேலும் திருமணத்திற்கு பிறகும் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா திரைப்படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது. தற்போது அவரின் நடிப்பில் நீ சிங்குவாரெகு என்ற கன்னட திரைப்படம் தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் தற்போது கன்னடத்திலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us