ரிசார்ட் வெப் சிரிஸ் நடிகைக்கு மிரட்டல் விடுத்த எரும சாணி விஜயகுமார் – நடந்தது என்ன?
Anugraha S Nambiar: தமிழில் வெப் சீரிஸ் கலாச்சாரம் அதிகரித்துவரும் நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிவரும் வெப் தொடர்தான் ரிசார்ட். இந்த வெப் தொடரில் நடிகையாக நடிக்கவைப்பதாக கூறி எரும சாணி விஜயகுமார், தற்போதுவரை பணம் கொடுக்காமல் தவிர்ப்பதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் நடிகை அனுக்ரஹா எஸ் நம்பியார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமா வட்டாரங்களில் தற்போது வெப் தொடர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சினிமா நடிகர்கள் பலரும் வெப் தொடர்களில் நாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் பிரபலமான வெப் தொடராக இருந்துவருவதுதான் ரிசார்ட் (Resort). இந்த வெப் தொடரில் எரும சாணி என்ற யூடியூப் பிரபல நடிகர் விஜயகுமார் (Eruma Saani Vijay Kumar) நாயகனாக நடிக்க, அவருடன் தலைவாசல் விஜய், தான்யாபல்லத் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை அறிமுக இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்க, பல்வறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். தற்போது இந்த தொடர்நது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் சிறப்பாக வெளியாகிவருகிறது. அந்த வகையில் இந்த வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தவறுவதாகவும், ஒருவருடத்திற்காக அக்ரிமெண்ட் வாங்கியும் தன்னை நடிக்க அழைக்கவில்லை.
வேறு எந்த வெப் தொடர்களிலும் நடிக்க விடவில்லை என மலையாள இளம் நடிகை அனுக்ரஹா எஸ் நம்பியார் (Anugraha S Nambiar) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவில் எரும சாணி விஜயகுமார் மற்றும் அவரின் மனைவி நக்ஷத்ரா மூர்த்தி (Nakshatra Moorthy)இருவரும் தன்னை தகாத வார்த்தையால் பேசி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: கருப்பசாமி பக்தர்களுக்காக ஸ்பெஷல் பாடல்.. கருப்பு பட ஆடியோ லான்ச் குறித்து வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!
எரும சாணி விஜயகுமார் குறித்து மலையாள நடிகை அனுக்ரஹா எஸ் நம்பியார் வெளியிட்ட வீடியோ பதிவு:
View this post on Instagram
அந்த வீடியோவில் பேசியிருந்த நடிகை அனுக்ரஹா எஸ் நம்பியார், ஓராண்டு ஒப்பந்தம் போட்டதகவும், ஆனால் அவரை இதுவரை எந்த ஷூட்டிங்கிற்கும் அழைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் மற்ற எந்த வாய்ப்புகளையும் பெறமுடியாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ரிசார்ட் வெப் தொடருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், இது கடுமையான நிதி நெருக்கடிக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் வழிவகுத்தது.
இதையும் படிங்க: ரஜினி – கமல்.. விஜய் – அஜித்.. தனுஷுக்கு யாரு? கே.எஸ்.ரவிக்குமாரின் கேள்விக்கு தனுஷ் கொடுத்த பதில்!
மேலும் நடிகர் எரும சாணி விஜயகுமார் மற்றும் அவரின் மனைவி நக்ஷத்திரா மூர்த்தி இருவரும் மிரட்டுவதாகவும், அதிலும் விஜயகுமாரின் மனைவி நக்ஷத்ரா அவரை தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தியானது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.