Mamitha Baiju: கர படத்தில் முதலில் மமிதாவின் வேடத்தில் நடிக்கவிருந்தவர் அந்த நடிகைதான் – இயக்குநர் விக்னேஷ் ராஜா ஓபன் டாக்!
Kara Heroine Casting Twist: வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் மமிதா பைஜூ. இவர் தனுஷின் கர படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிலையில், படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் மமிதா பைஜூ நடித்திருந்த செல்லி வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் என்பது குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு வெளியான போர் தொழில் (Por Thozhil) என்ற திரைப்படத்தின் மூலம், கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja). இவரின் இயக்கத்தில் தற்போது 2வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் கர (Kara). இப்படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) லீட் நயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார் (KS Ravikumar), பிரித்வி, கருணாஸ் மற்றும் ஜெயராம் என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த கர திரைப்படமானது முற்றிலும் கிராமத்து திரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
அதன்படி சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, கர படத்தில் மமிதா பைஜூ நடித்திருந்த செல்லி என்ற வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யாரை என தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேறுயாருமில்லை, மை லார்ட், 3BHK போன்ற படங்களில் நடித்த கன்னட நடிகை சைத்ரா ஆச்சார்தான்.




இதையும் படிங்க: சமுத்திரக்கனியின் பிறந்தநாளை கொண்டாடிய அரசன் படக்குழு!
கர படத்தில் மமிதாவின் வேடத்தில் நடிக்கவிருந்த மற்றொரு நடிகை குறித்து விக்னேஷ் ராஜ பேச்சு:
அதில் அவர் பேசுகையில், “கர படத்தின் கதாநாயகி இறுதியில், மமிதா மற்றும் சைத்ரா ஆச்சார் என இரு நடிகைகள்தான் இறுதியாக தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். அப்போதுதான் சைத்ரா என்னிடம் சொன்னாங்க, மை லார்ட் என்ற படத்தில் நான் பணியாற்றுகிறேன், அந்த படத்திலும் எனது வேடம் செல்லி வேடத்தை போலவேதான் இருக்கும் என கூறினார். அப்போது எனக்கு ஒரு சிறிய நெருடல் இருந்தது. அவரின் கதாபாத்திரம் கர படத்தில் ஒரு புதியதாக இருக்காது என தோன்றியது.
இதையும் படிங்க: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் – இயக்குநர் ரத்னகுமார்!
அதற்கு பிறகு நான் மமிதாவை அணுகினேன், அவர் துள்ளலான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால், இந்தப் படத்திற்கு “நோ’ என்று சொல்லிவிடுவார் என முதலில் நினைத்தேன், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவர் ஒப்புக்கொண்டார். அதற்கு பிறகு கர படத்தில் அவர் நடிகையாக நுழைந்தார்” என அதில் இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்திருந்தார்.
மமிதா பைஜூவிற்கு முன் கர படத்தில் நடிக்கவிருந்தவர் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா:
Director #VigneshRaja:
For #Kara, we initially finalized #Chaithra as the female lead & conducted look test for her. Chaithra told she’ll be having same kind of look for Sasikumar’s #MyLord Movie, which will release before Kara✌️
So i approached #MamithaBaiju after that,… pic.twitter.com/Ft0SvlgKuJ— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2026