Dhanushs: ரஜினி – கமல்.. விஜய் – அஜித்.. தனுஷுக்கு யாரு? கே.எஸ்.ரவிக்குமாரின் கேள்விக்கு தனுஷ் கொடுத்த பதில்!
Dhanushs Unique Path: நடிகர் தனுஷ் தொடர்ந்து சினிமாவில், நடிகர், இயக்குநர் என பல்வேறு விதமான பணிகளை தொடர்ந்து செய்துவருகிறார். இவர் கர என்ற புது படத்தில் நடித்திருக்கும் நிலையில், இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அதில் தனுஷிற்கு போட்டி எந்த நடிகர் என்ற கே.எஸ்.ரவிக்குமாரின் கேள்விக்கு தனுஷ் சிறப்பான பதிலை கொடுத்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பன்முக திறமைகொண்ட நடிகராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர், பாடகர் என பல்வேறு பணிகளை செய்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் கர (Kara). இந்த படமானது ஒரு கிராமத்து ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியிருக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இப்படமானது 2026ம் ஆண்டில் வெளியாகும் தனுஷின் முதல் படமாக அமைந்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் சிறப்பாக வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கோவையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனுஷிடம், ரஜினி.. கமல், விஜய்.. அஜித், தனுஷிற்கு யாரு போட்டி? என கேட்டிருந்தார். அதற்கு தனுஷ் சொன்ன பதில் பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க: தனது இயக்கத்தில் எப்போது படம் உருவாகும்? – ரசிகர்களுக்கு தனுஷ் சொன்ன விளக்கம்!
கே.எஸ். ரவிக்குமாரின் கேள்விக்கு சிறப்பான பதிலை கொடுத்த தனுஷ்:
அந்த நிகழ்ச்சியின்போது கே.எஸ்.ரவிக்குமார், தனுஷிற்கு போட்டியாக எந்த நடிகர் இருக்கிறார். சூர்யாவா?, கார்த்தியா? அல்லது ஜெயம் ரவியா? என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தனுஷ், “சார் நம்ம எப்போதுமே ஒரு தனி ரூட்டில் போயிடு இருக்கோம். நான் என் பாதையில் தான் கவனம் செலுத்துகிறேன். யாரையும் பின்தொடரவும், போட்டியிடவும் முயற்சி செய்வதில்லை. நேற்று இருந்த என்னைவிட இன்று சிறந்தவராக வேண்டும் என்பதே என் இலக்கு. நடிப்பிலும், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியிலும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன்” என அதில் அவர் சிறப்பான பதிலை கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: வெள்ளிச்சுடரே… விஷ்ணு விஷால் – மமிதாவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
D voice that transcends us #KovaiyilKarasaami ♥️#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @RedGiantMovies_ @Inban_U @alfredprakash17 @thenieswar… pic.twitter.com/8u9wYoHtDh— Vels Film International (@VelsFilmIntl) April 26, 2026
இந்த கர படமானது இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படமாக உள்ளது. இந்த படமானது வித்தியாசமான ஜானரில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.