Marie Wilson Speech TN Budget 2026 LIVE : தமிழ்நாடு பட்ஜெட்.. அமைச்சர் மரிய வில்சன் உரை!
மிகுந்த எதிர்பார்ப்புடன் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். பின்னர் 10 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கி 2 மணி நேரத்துக்கு மேலாக படித்தார்
தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார் நிதி அமைச்சர். ஒவ்வொரு துறையாக ஒதுக்கப்பட்ட நிதி வாரியாக அமைச்சர் விவரங்களை வழங்கினார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பட்ஜெட் உரையை வாசித்தார் நிதி அமைச்சர். முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய முதல்வர் விஜய், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அந்த திட்டங்கள் எப்போது நிறைவடையும் என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் மேம்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த பட்ஜெட்டுக்கான முடிவுகளை எடுத்துள்ளார். அதன்படியே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
