Magudam: விஷாலின் மகுடம் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!
Vishals Magudam Movie Censor Update: நடிகர் விஷாலின் நடிப்பிலும், இயக்கத்திலும் உருவாகியுள்ள புது திரைப்படம்தான் மகுடம். இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதையில் உருவாகியுள்ள நிலையில், இதற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என விவரமாக காணலாம்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷால் (Vishal). இவரின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி, ஹிட்டடித்துள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடிகர்க பணியாற்றிய இவர், இயக்குநராக அறிமுகமாகியுள்ள புது திரைப்படம்தான் மகுடம் (Magudam). இந்த படத்தில் விஷால் வெறும் இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் நடித்துள்ளார். இதில் அவர் மொத்தமாக 3 வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் சமூக நீதி, அதிரடி கேங்ஸ்டர்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார்.
இவரின் இசையில் இப்படத்திலிருந்து இதுவரை மொத்தமாக 4 பாடல்கள் வெளியாகிவிட்டது. இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளாள் நிலையில், சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: An Ordinary Man டைட்டில் படத்தின் முதல் சாய்ஸ் இல்லை – இயக்குநர் ரவி மோகன்
மகுடம் திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
இந்த மகுடம் பட டீசரில் அதிரடி ஆக்ஷன் மற்றும் வன்முறைகள் கொண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இப்படத்திலும் இது அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு தணிக்கை குழு “யு/ஏ” தர சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளது. அதன்படி 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இப்படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் சென்சார் தொடர்பான அறிவிப்பை நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: டிசி முதல் ஜிடிஎன் வரை… நாளை பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
நடிகர் விஷால் பகிர்ந்த மகுடம் பட சென்சார் தொடர்பான எக்ஸ் பதிவு:
#Magudam Certified U/A#DirectorVishal #MagudamCertifiedUA #MagudamTrailerFromAug7th #MagudamReleaseOnAug14th #SGF99 pic.twitter.com/s8AJYZPl9n
— Vishal (@VishalKOfficial) August 6, 2026
மகுடம் படத்துடன் மோதும் படங்கள்;
விஷாலின் இந்த மகுடம் படத்தில் அவருடன் அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ளனர். இதில் விஷால் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் இப்படம் வெளியாகும் நிலையில், இப்படத்துடன் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகிறது. மேலும் கவினின் ஹாய் படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதியை மாற்ற வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதனால் மகுடம் மற்றும் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரு படங்கள் மத்தியில் மோதல் இருக்கிறது. இப்படத்தில் எந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



