மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு – சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம்!
தமிழக சட்டமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு கோரி நாளை சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தீர்மானத்தை முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 6 : தமிழக சட்டமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 6, 2026 இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த 2 பட்ஜெட் குறித்து ஆகஸ்ட் 7, 2026 நாளை விவாவதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு கோரி நாளை சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம்!
இது குறித்து வெளியான அறிவிப்பில், மத்திய வரிகளில் பகிர்வு தமிழ்நாட்டின் நிதி நலன்களை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் மத்திய வரிப் பகிர்வுக்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வினை உறுதி செய்ய வலியுறுத்தி நாளை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தீர்மானத்தை முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!




மேலும், ஆகஸ்டு 7, 2026 நாளை முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். செப்டம்பர் 8, 2026 தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். மேலும், ஆகஸ்டு 8,9ம் தேதிகள் அரசு விடுமுறை, ஆகஸ்டு 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும். காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை நடைபெறும்.
ஆகஸ்டு 12ம் தேதி பட்ஜெட் மீதான பதிலுரை அளிக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் நாட்களை அதிகரிக்க திமுக, பாமக கோரியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
முன்னதாக கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது கடிதத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
மேலும் அம்மாவட்டங்களின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி – காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியமென்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.