AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குறிப்பிட்ட மது வகைகள் தமிழ்நாட்டில் ஏன் கிடைப்பதில்லை? – அமைச்சர் சொன்ன பதில்

டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் புக் செய்து மது வாங்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மது விலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ், ஆன்லைனில் மதுபானம் விற்பனை என்பது தவறானது. ஆன்லைனில் மதுவை பெற முடியாது. முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என்றார்.

குறிப்பிட்ட மது வகைகள் தமிழ்நாட்டில் ஏன் கிடைப்பதில்லை? – அமைச்சர் சொன்ன பதில்
அமைச்சர் விக்னேஷ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Aug 2026 18:54 PM IST

சென்னை, ஆகஸ்ட் 5 : டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் புக் செய்து மது வாங்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக TASMACE2E.IN என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் கடையை தேர்வு செய்து அங்கு ஸ்டாக்கில் உள்ள எல்லா மதுபானத்தையும் பார்த்து, வேண்டியதை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். பின்னர் நேரில் சென்று, பாட்டிலை பெறலாம். இந்த வசதி ஆகஸ்ட் 6, 2026 இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இது மது பழக்கத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் மது விலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆன்லைனில் மதுபானம் விற்பனை என்பது தவறானது. ஆன்லைனில் மதுவை பெற முடியாது. முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். கடைகளில் போய்தான் மதுபானம் வாங்க முடியும். ஆன்லைன் முன்பதிவு சோதனை நிலையில்தான் உள்ளது. எல்லா நிறுவனத்தின் மது பானங்களும் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிக்க : இன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

குறிப்பிட்ட மது வகைகள் தமிழ்நாட்டில் ஏன் கிடைப்பதில்லை?

மேலும் பேசிய அவர், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெறுவதை தடுக்கவே ஆன்லைன் மூலம் மதுபானம் புக் செய்யும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுபானம் மூலம் அரசுக்கு வருவாய் பெருக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மதுபானம் விலை உயராது. ஊழலை தடுத்ததால் வருமானம் அதிகரித்துள்ளது. மதுக்கூடங்களின் அவல நிலை மாற்றப்படும். இடையூறான மதுக்கடைகள் இடமாற்றப்படும். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது 2011 முதலே உள்ளது என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு திட்டம் வரும்போது அதற்கு எதிர்ப்புகள் அதிகமாக வரும் இருந்தாலும் எதிர்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அரசு உள்வாங்கி கொண்டிருக்கிறது என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் Budweiser போன்ற பீர் ஏன் விற்பனை செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் Budweiser போன்ற பீர் வகைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர பார்க்கலாம் என்றார்.

இதையும் படிக்க : தமிழக வெற்றிக் கழகம் தெரியும்.. அதென்ன தக்காளி வெற்றிக் கழகம்? பரபரப்பை ஏற்படுத்திய அரசு பேருந்து!

இது தொடர்பாக பாமக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow Us