AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை முதல் ஆன்லைனில் மது புக் செய்யலாம் – இணையதளம் அறிமுகம்

டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்க, ஆன்லைனில் புக் செய்து மது வாங்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. TASMACE2E.IN என்ப இணையதளம் மூலம் ஆன்லைனில் கடையை தேர்வு செய்து அங்கு ஸ்டாக்கில் உள்ள எல்லா மதுபானத்தையும் பார்த்து, வேண்டியதை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். பின்னர் நேரில் சென்று, பாட்டிலை பெறலாம். நாளை இவ்வசதி அமலுக்கு வருகிறது

நாளை முதல் ஆன்லைனில் மது புக் செய்யலாம் – இணையதளம் அறிமுகம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Aug 2026 18:39 PM IST

சென்னை, ஆகஸ்ட் 5 : டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்க, ஆன்லைனில் புக் செய்து மது வாங்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. TASMACE2E.IN என்ப இணையதளம் மூலம் ஆன்லைனில் கடையை தேர்வு செய்து அங்கு ஸ்டாக்கில் உள்ள எல்லா மதுபானத்தையும் பார்த்து, வேண்டியதை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். பின்னர் நேரில் சென்று, பாட்டிலை பெறலாம். நாளை இவ்வசதி அமலுக்கு வருகிறது.

நாளை முதல் ஆன்லைனில் மது புக் செய்யலாம்

இந்த இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் தங்களுக்கு விருப்பமான கடையைத் தேர்ந்தெடுத்து, அங்கு கையிருப்பில் உள்ள மதுபான வகைகள் மற்றும் அவற்றின் சரியான விலையைத் தெரிந்துகொண்டு, வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து பணத்தையும் செலுத்த முடியும். இத்திட்டம் மாநிலத்திலுள்ள அனைத்து 4,038 சில்லறை விற்பனைக் கடைகளிலும் நடப்பிற்கு வரவுள்ளது.

இதையும் படிக்க : தமிழக பட்ஜெட்.. “Blast Blast” இல்ல “Waste Waste”… மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

இணையதளம் வழியாக மது வகையைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தியதும்வாடிக்கையாளருக்கு ஒரு ‘கியூஆர்’ குறியீடு வழங்கப்படும். அதைச் சில்லறை விற்பனைக் கடையில் காட்டி மதுபானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.  இதனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடியும்.

பணம் செலுத்திய பிறகு நமக்கு கியூஆர் கோடுடன் கூடிய பில் அனுப்பப்படும். அவற்றை கடைகளில் ஸ்கேன் செய்த பிறகு நம் ஆர்டர் செய்த மதுபானம் வழங்கப்படும். ஆர்டர் செய்த அதே நாளிலேயே மதுபானம் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் சென்றால் ரூ.10 பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் குறைக்கப்படும் என டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.

இதையும் படிக்க : பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா? – திமுக விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow Us