AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Budget 2026: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு.. துறை வாரியான முழு நிதி ஒதுக்கீடு விவரம்!!

Tamil Nadu Budget education department allocation: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தாய் மாமன் தங்க மோதிரம், வெற்றிப் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget 2026: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு.. துறை வாரியான முழு நிதி ஒதுக்கீடு விவரம்!!
அமைச்சர் மரிய வில்சன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Aug 2026 11:13 AM IST

சென்னை, ஆகஸ்ட் 05: தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் முதலாவது முழுமையான நிதிநிலை அறிக்கையை (2026–2027) நிதித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கல்வி, சமூக நலன், இளைஞர் நலன் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!

பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு விவரம்:

மாநிலத்தின் மிக முக்கியத் துறையான பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ. 44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025–2026 ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பு 2026–2027 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 44,527 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ. 2,240 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியத் துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு:

சிறப்புத் திட்டச் செயல்பாட்டுத் துறை ரூ.17,150 கோடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ரூ.9,819 கோடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ரூ.2,022 கோடி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ரூ.1,700 கோடி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ரூ.1,485 கோடி, விளையாட்டுத் துறை ரூ.1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் மாணவர் நலச் சிறப்புத் திட்டங்கள்:

பள்ளிக் கல்வி மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நவீனத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்திற்கு ரூ. 560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 300 கோடி, மாணவர்களின் திறனை உயர்த்தும் வெற்றிப் பயிற்சித் திட்டத்திற்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026: மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்.. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..

சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்: கல்வி நிறுவனங்களின் தூய்மையை பராமரிக்க ரூ. 139 கோடி, பாடத்திட்டங்களை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க ரூ. 25 கோடி, மாணவர்கள் தங்கும் விடுதிகளின் வசதிகளை மேம்படுத்த ரூ. 10 கோடி, போதையில்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ. 7 கோடி, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி: அரசுப் பணி மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ரூ. 3.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow Us