தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! சென்னையில் 29.14 லட்சம் வாக்காளர்கள் – டிசம்பர் 11 வரை பெயர் சேர்க்கலாம்
Tamil Nadu Draft Electoral Rolls 2027: சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ. குமரகுருபரன் (சமீரன்) வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, சென்னையில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 46,200 முதல்முறை வாக்காளர்களும், 85 வயதுக்கு மேற்பட்ட 28,159 மூத்த குடிமக்களும் உள்ளனர்.
நவம்பர் 12, 2026: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 2027-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (Special Summary Revision – SSR 2027) ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு இந்தத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ. குமரகுருபரன் (சமீரன்) வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, சென்னையில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 46,200 முதல்முறை வாக்காளர்களும், 85 வயதுக்கு மேற்பட்ட 28,159 மூத்த குடிமக்களும் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் வீரப்பன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 23,26,822 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 5,58,729 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,72,898 பேர் ஆண்கள், 2,85,714 பேர் பெண்கள், 117 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
மேலும் படிக்க: கந்த சஷ்டி சூரசம்ஹாரம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளிலும் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். செய்யூர், மதுராந்தகம் தொகுதிகளில் தலா 2,14,920 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் கவிதா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 32,39,301 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆவடி தொகுதியில் அதிகபட்சமாக 4,39,953 வாக்காளர்களும், மாதவரம் தொகுதியில் 4,37,465 வாக்காளர்களும் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் 3,77,267 பேரும், பூந்தமல்லியில் 3,72,249 பேரும், அம்பத்தூரில் 3,39,397 பேரும் இடம்பெற்றுள்ளனர். திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை:
தமிழகம் முழுவதும் தற்போது 5,69,17,979 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 2.90 கோடி பேர் பெண்கள், 2.78 கோடி பேர் ஆண்கள், 7,656 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: போக்குவரத்து வேலை மோசடி வழக்கு: விசாரணையை இழுத்தடித்தால் ஜாமீன் ரத்து! செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை..
கடந்த 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது (SIR), தமிழகத்தில் சுமார் 97.4 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் எனப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் மூலம் தகுதியுள்ள விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் தங்கள் பெயர்களைச் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்புபவர்கள், பெயர் அல்லது முகவரியில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் டிசம்பர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- படிவம் 6: வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க.
- படிவம் 7: வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க ஆட்சேபனை தெரிவிக்க அல்லது நீக்கக் கோர.
- படிவம் 8: முகவரி மாற்றம், பெயர் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய.
இந்த விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), தேர்தல் பதிவு அலுவலர் அலுவலகம் அல்லது ஆன்லைன் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்களது பெயர்களை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Voters’ Service Porta அல்லது ECINET செயலி மூலம் சரிபார்த்து விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்குச்சாவடிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்வையிடலாம்.