கந்த சஷ்டி- சூரசம்ஹாரம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
Tiruchendur Special Buses : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆறுபடை வீடுகளில் 2- ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 15- ஆம் தேதி) நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
திருச்செந்தூருக்கு 3 நாள்கள் சிறப்பு பேருந்துகள்
அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்செந்தூருக்கு 3 நாள்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி நிர்வாக இயக்குனர் செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற நவம்பர் 15- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதற்கும் நாங்கள் தயார்.. கே.ஏ.செங்கோட்டையன்!




சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நாளை மறுநாள் சனிக்கிழமை ( நவம்பர் 14- ஆம் தேதி), நவம்பர் 15- ஆம் தேதி, நவம்பர் 16- ஆம் தேதிகளில் என 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில்,
- தூத்துக்குடி.
- கோவில்பட்டி.
- திருநெல்வேலி.
- திசையன்விளை.
- உடன்குடி
ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் போக்குவரத்து மேலாண் இயக்குனர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சிறப்பு பேருந்து அறிவிப்பு

வெகுவிமரிசையாக நடைபெறும் சூரசம்ஹாரம்
ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் கந்த சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசு மறைக்கிறதா? எம்எல்ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் உள்ளதா.. அண்ணாமலை கேள்வி!