IPL 2027: கேப்டன்ஷி வேண்டாம்.. பதவியை நிராகரிக்கும் அக்சர் படேல்.. கட்டாயப்படுத்தும் அணி நிர்வாகம்!
Delhi Capitals Captaincy: ஐபிஎல் 2027 தொடருக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன்சி குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. கேப்டன் அக்சர் படேல், தொடர்ந்து தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயக்கம் காட்டுவதாகவும், வீரராக மட்டுமே விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சீசன்களில் அணியின் மோசமான செயல்பாடு மற்றும் படேலின் தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்பட்டதுமே இதற்கு முக்கிய காரணம்.
ஐபிஎல் 2027 தொடருக்கு (IPL 2027) முன்னதாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனில் டெல்லி அணியை வழிநடத்த, அதன் கேப்டன் அக்சர் படேல் தயக்கம் காட்டி வருகிறார். அக்சர் படேல் இனி கேப்டனாக இருக்க விரும்பவில்லை, ஆனால் அணி நிர்வாகமும் உரிமையாளர்களும் அவரைத் தொடர்ந்து கேப்டனாகப் பொறுப்பேற்கும்படி வற்புறுத்தி வருகின்றனர். அக்சர் படேல் (Axar Patel) கடந்த 2 ஐபிஎல் சீசன்களாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார், ஆனால் அந்த காலகட்டத்தில் அணி சிறப்பாக செயல்படவில்லை. டெல்லி அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெறத் தவறியது.
மேலும், படேலின் தனிப்பட்ட ஆட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் விளைவாக, கேப்டன் பதவியின் கூடுதல் சுமையிலிருந்து அவர் விடுபட விரும்புகிறார். இருப்பினும், நிர்வாகம் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகிறது.




ALSO READ: டெல்லிக்கு படையெடுக்கும் பயிற்சியாளர்கள்.. ஸ்பின் கோச்சாக அமித் மிஸ்ரா நியமனம்!
அக்சர் படேல் கேப்டன் பதவியிலிருந்து விலக விருப்பம்:
🚨 AXAR PATEL NOT KEEN, RISHABH PANT NOT INTERESTED, DELHI CAPITALS IN BIG TROUBLE. 🚨
– Both Axar Patel and Rishabh Pant have informed the DC management that they do not want to captain the team and would prefer to play only as players.
– Additionally, KL Rahul is also not particularly keen on taking up the captaincy.
– This is why the Delhi Capitals management is facing a bit of a dilemma over whom to appoint as captain for IPL 2027.
– However, the DC management has spoken to Axar Patel and is trying to convince him to continue as captain.
– If the DC management fails to convince Axar Patel, KL Rahul could very likely become the new captain of Delhi Capitals for IPL 2027.— lndian Sports Network (@IS_Netwrk29) November 12, 2026
கிடைத்த தகவல்களின்படி, அக்சர் படேல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக விரும்புகிறார். மேலும், வரும் ஐபிஎல் 2027 சீசனில் அக்சர் படேல் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும், டெல்லி அணி நிர்வாகம் தற்போது அக்சர் கேப்டனாகத் தொடர வேண்டும் என்று விரும்புகிறது. மேலும், அணி உரிமையாளர்களும் அக்சரை கேப்டன் பொறுப்பை ஏற்கும்படி வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக, அக்சர் படேல் பரிமாற்றம் செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பல அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அணுகி, பல நல்ல சலுகைகளை வழங்கின. இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அந்த சலுகைகள் அனைத்தையும் நிராகரித்துள்ளது. மேலும், ஏலம் நடைபெறும் வரை கேப்டனின் பெயரை அறிவிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.
ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்ட்யா.. கேப்டன்ஷியில் மாற்றமா..?
டெல்லி அணியின் அதிரடி மாற்றங்கள்:
ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சௌரவ் கங்குலி தலைமைப் பயிற்சியாளராகவும், யுவராஜ் சிங் புதிய உதவிப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சமிந்த வாஸ் மற்றும் அமித் மிஸ்ரா போன்ற வீரர்களும் பயிற்சி ஊழியர்களுடன் இணைந்துள்ளனர்.
அக்சர் படேலின் மோசமான செயல்பாடு
கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு படேலின் செயல்பாடு ஏமாற்றமளித்தது. அவர் ஐபிஎல் 2026 தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, 173 ரன்கள் எடுத்து 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.