Tamil Nadu Budget 2026: மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்.. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..
Tamil Nadu Budget School Education allocation: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்பில் \'வெற்றி\' மடிக்கணினி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன.
ஆகஸ்ட் 5, 2026: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்பில் \’வெற்றி\’ மடிக்கணினி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மிதிவண்டிகளுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களின் கல்வித் தரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.