IND vs NZ: மீண்டும் மீண்டும் வரும் மழை.. தடைப்படுமா IND vs NZ 4வது ஒருநாள் போட்டி?
India vs NZ 4th ODI Weather Update: இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடரில் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றாலும், மூன்றாவது கைவிடப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இத்தொடரின் நான்காவது ஒருநாள் போட்டிக்கு நல்ல செய்தி உள்ளது. மவுண்ட் மவுங்கானுயில் நடக்கும் போட்டியில் மழைக்கு 10% மட்டுமே வாய்ப்பு என்பதால் முழுமையாக நடைபெறலாம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் மழை தன் பங்கிற்கு தனியாக ஒரு ஆட்டத்தை ஆடி வருகிறது. இதனால், இரு அணிகளுக்கு இடையிலான முதல் 2 போட்டிகள் பலமுறை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 3வது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக (Rain) கைவிடப்பட்டது. தற்போது, நான்காவது போட்டியும் மழையால் பாதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இதுவரை பெரிய ஸ்கோர்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
ALSO READ: இந்திய அணியின் 29வது ஒருநாள் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்.. இதுவரை இருந்த கேப்டன்கள் பட்டியல்!
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பந்து ஸ்விங் ஆவதால், இரு நாட்டு அணியின் பேட்ஸ்மேன்களும் திணறி வருகின்றனர். வானிலையும் ஒரு காரணியாக இருந்தது, ஏனெனில் மேகமூட்டமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் ஆக வாய்ப்பை தருகிறது. எனவே, நான்காவது ஒருநாள் போட்டியின் போது வானிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.




தொடரில் இந்தியா முன்னிலை
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் DLS முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3வது போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. மேலும் டாஸ் போடப்படவில்லை. தற்போது, மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் 4வது போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன.
நான்காவது ஒருநாள் போட்டியின் போது வானிலை எப்படி இருக்கும்?
2026 நவம்பர் 13ம் தேதியான நாளை இரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி நடைபெறும் பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் போது வானிலை தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய நாளில் மழை பெய்ய 10 சதவிகித வாய்ப்பு இருப்பதால், போட்டி முழுவதுமாக நடைபெற வாய்ப்புள்ளது. இந்த ஒருநாள் தொடரில் இதுவரை 50 ஓவர் ஒருநாள் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை, ஆனால் இங்கு ஒரு முழுமையான 50 ஓவர் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 நவம்பர் 13ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும், இரவில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைய வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: ஒருநாள் கேப்டனாக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி..?
கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்:
இந்தியா – நியூசிலாந்து இடையிலான நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக, வழக்கமான கேப்டன் சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக, ஒருநாள் போட்டிகளின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அணியை வழிநடத்துவார். அவரது கேப்டன்சியின் கீழ், இந்தியா இதற்கு முன்பு டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.