கோவை – ஜெயப்பூர் மற்றும் திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – முன்பதிவு எப்போது?
கோவை - ஜெய்ப்பூர் மற்றும் திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிர்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 6, 2026 நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 5 : கோவை – ஜெய்ப்பூர் மற்றும் திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிர்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 6, 2026 நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனையடுத்து இந்த ரயில்களில் பயணிக்க விரும்புகிறவர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்வதன் மூலம் கடைசி நேர பரபரப்பை தவிர்க்க முடியும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோவை – ஜெயப்பூர் இடையே சிறப்பு ரயில்
பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேவையைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கோவையில் இருந்து ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய வியாழக்கிழமை நாட்களில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06181 கொண்ட வாராந்திர சிறப்பு ரயில், ரயில் கிளம்பிய 3வது நாள் மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும்.




இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் அலர்ட்!
மறுமார்க்கத்தில், ஜெய்ப்பூரில் இருந்து ஆகஸ்ட் 16, 23, 30, செப்டம்பர் 6 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் சரியாக இரவு 10.05 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06182 கொண்ட வாராந்திர சிறப்பு ரெயில் 4வது நாள் காலை 8.30 மணிக்கு கோவையை வந்தடையும். 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில், தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 6, 2026 நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்
அதே போல பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 13, 20, 27 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் 06070 என்ற வண்டி எண் கொண்ட வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதையும் படிக்க : Tamil Nadu Budget 2026: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு.. துறை வாரியான முழு நிதி ஒதுக்கீடு விவரம்!!
மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.55 மணிக்கு புறப்படும் 06069 என்ற வண்டி எண் கொண்ட வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 6, 2026 நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.