AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – கோவையில் தொழில்துறையினர் கருத்து

தமிழகத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு சமர்பித்துள்ள முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக ரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – கோவையில் தொழில்துறையினர் கருத்து
தமிழக பட்ஜெட் குறித்து தொழிற்துறையினர் கருத்து
Sekaran S
Sekaran S | Updated On: 05 Aug 2026 15:38 PM IST

சென்னை, ஆகஸ்ட் 5 : தமிழக வெற்றிக்கழகம் சமர்பித்துள்ள முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக ரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆகஸ்ட் 5, 2026 இன்று புதியதாக ஆட்சியமைத்துள்ள தவெக அரசின் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

இந்த நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து கோவையில் தொழில் துறையினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழக அரசு முதல் முறை தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எங்களுக்கு முழுக்க ஏமாற்றத்தை அளிப்பதாகவும், அரசிடம் நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். மின் கட்டணத்தில் நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும் என, தமிழக முதல்வரை கடந்த வாரம், சந்தித்து மனு அளித்துள்ளோம். எதாவது ஒரு கோரிக்கையை மட்டும் முன் வையுங்கள் என்று முதல் கூறினார். அப்பொழுது கூட நிலை கட்டனத்தை, பாதியாக குறைக்க தெரிவித்தோம். இது சம்பந்தமாக உரிய பரிசீலனை நடத்தி நல்ல அறிவிப்பு வெளியிடுவதாக முதல்வர் எங்களிடம் கூறினார். ஆனால் அது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் அவர் வெளியிடாதது முழு ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இதன் பின்னால் ஏதேனும் அறிவிப்பு வருமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. நிலை கட்டணத்தை பாதியாக குறைத்தால் மட்டுமே குறுந்தொழிலுக்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, அவை அனைத்தும் சிப்காட் மூலமாக துவங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்,

அந்த ஐந்து தொழில்பேட்டைகளிலும் குறுந்தொழிலுக்கு என்று சலுகை விலையில் பல்வேறு திட்டங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதற்கான அறிவிப்பும் பின்னால் வரும் என்று எதிர்பார்ப்பும் தொழில்துறையினருக்கு உள்ளதாக தெரிவித்தார். புதியதாக தொழில் கொள்கைகள் என்ற ஒரு திட்டத்தை தெரிவித்துள்ளனர், அந்த கொள்கையில் குறுந்தொழில்களுக்கு என்று ஒரு சில கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என்றும், இது குறித்து எங்களிடம் உரிய பேச்சு வார்த்தை நடத்தி, அதில் உள்ள இடையூறுகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள், தெரிந்து பின்னர் அது குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் இதற்கான கருத்துக்கணிப்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,

குறுந்தொழில் முனைவோர்களுக்கு வட்டி மானியம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும், கடந்த காலங்களில் மாவட்ட தொழில் மையத்தில் 6 விழுக்காடுகள் வரை தொழில் மானியம் வழங்கிவந்த நிலையில் தற்போது 12 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே பழைய திட்டத்தின் கீழ் மீண்டும் தொழில் தொல்லையினருக்கு ஆறு சதவீத வட்டி மானியத்தில் கடன் உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்படி தொடரும் பட்சத்தில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள், உருவாக வாய்ப்பு ஏற்படும் என்று கூறியவர், தொழில் துறைக்கு கடந்த பட்ஜெட்டின் பொழுது வழங்கப்பட வேண்டிய கடன் தொகை 100 கோடிக்கு மேல் நிலுவையில், இருந்து வருகின்றது, மீதமுள்ள 258 கோடி மட்டுமே தமிழகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்க்கு தொழில் துறையினருக்கு கூடுதலாக மேலும் தேவைப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் புதிய புதிய தொழில்கள் உருவாக்கினால் மட்டுமே தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி பெருகும் என்று கூறியவர், முதலீட்டு மானியங்களை தமிழக அரசு தர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசுகள் தொழில் துறையினருக்கு பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றது, அதேபோல் தமிழகத்திலும் அரசு வழங்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை?

தற்போது அறிவிக்க பட்ட பட்ஜெட் ஓரளவிற்கு வரவேற்பதாக இருந்தாலும், இன்னும் கூடுதல் திட்டங்களை அறிவித்திருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்றார். புதியதாக ஆட்சி அமைத்துள்ள அரசு என்பதால் இத்தகைய பட்ஜெட் குறித்த விமர்சனங்களை வைக்க முடியாமல் இருந்தாலும் இனி வரும் காலங்களில் கூடுதலாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக வெற்றி கழகம் தங்களது தேர்தல் அறிக்கையில் தொழில்துறையினர் சந்தித்து வருகின்ற நிலை கட்டணத்தை பாதியாக குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தனர், ஆனாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். இதே நிலை கட்டணம் தொடர்ந்தால் தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை திறனை இழக்கக்கூடும், இதனால் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்படும். தொழில் துறையினர் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாக கூடும் என்று எச்சரித்துள்ளார்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் தொழில் துறையினருக்கு ஒரு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Follow Us