Tamil Nadu State Budget : அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டில் சூப்பர் அறிவிப்பு… நிதித்துறை அமைச்சர் தகவல்!
Tamil Nadu Budget Govt Employees Insurance allocation : தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டில் ரூ. 838 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இதில், என்னென்ன அறிவிப்புகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
தமிழக அரசின் நிகழ் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) தாக்கல் செய்தார். இதில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இதில் அடிப்படை காப்பீடாக ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூபாய் 12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது அறிய வகை நோய்களுக்கு ரூபாய் 15 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் 292 சிகிச்சைகள் மற்றும் 1535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூபாய் 838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
இதே போல, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சிறப்பு பணி குழு எல்லை சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூரில் கிரானைட் பாலிசி வடிவமைப்புகள் மையங்கள் நிறுவப்பட உள்ளன. இயற்கை வளங்கள் துறைக்கு மொத்தம் ரூ. 438 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வு கால நன்மைகளுக்கு ரூ. 47 ஆயிரத்து 240 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
மேலும், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீதி மற்றும் நிர்வாக துறை ரூ. 2,456 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிராட்வேயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு ரூ. 1,375 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ளது.
காயிதே மில்லத் விருது
தமிழகத்தில் 200 சிறந்த கலை குழுக்களுக்கு ஆண்டுதோறும் 300 நாட்கள் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கப்படும். ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாள் அன்று காயிதே மில்லத் விருது வழங்கப்படும். 300 திருக்குறள் ஒப்புவிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ. 28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3 ஆயிரம் கோயில்களில் திருப்பணி – குடமுழுக்கு
அடுத்த 5 ஆண்டுகளில் 3000 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்யப்படும். 250 குளங்கள் 75 மர தேர்கள் சீரமைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான 213 கோயில்கள் புனரமைக்கப்படும். பக்தர்கள் அதிகமாக வரும் கோயில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.