AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Budget 2026 : தமிழக பட்ஜெட்டில் டாப் அறிவிப்புகள் என்னென்ன… முழு விவரம் உள்ளே!

Tamil Nadu Budget Key Announcements : தமிழக பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுருந்தார். இதில், அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதில், டாப் இடங்களில் என்ன அறிவிப்புகள் உள்ளன.

Tamil Nadu Budget 2026 : தமிழக பட்ஜெட்டில் டாப் அறிவிப்புகள் என்னென்ன… முழு விவரம் உள்ளே!
தமிழக பட்ஜெட்டில் டாப் அறிவிப்புகள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Aug 2026 12:01 PM IST

தமிழக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதில், பல்வேறு வகையான அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதில், அமைச்சர் மரிய வில்சன் அறிவித்த அறிவிப்புகளில் டாப் அறிவிப்புகள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராக கருதி அவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரம்ப கால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

  • டிஜிட்டல் மாற்றத்துக்காக தமிழகத்தை அதிநவீன மாநிலமாக மாற்றும் முயற்சியின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 8393 கோடியில் வெற்றி மணிக்கணினி திட்டம் தொழில்நுட்ப திறனை உயர்த்த ரூபாய் 2000 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
  • உலக தரத்திலான செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காக கல்வியாளர்கள், தொழில் முறை முன்னோடிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும். பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ ஐ திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
  • ரூ. 90 கோடியில் 5 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள். சட்டக் கல்வியே மேம்படுத்துவதற்காக புதிய சிறப்பு அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. 10 ஆயிரம் பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ. 1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ. 42 கோடியில் கிராமிய விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்து திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு வீரர்களுக்கான நிதி உதவியே அதிகரிப்பதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு.
  • சமூகநீதித்துறைக்கு ரூ. 3937 கோடி நிதி ஒதுக்கீடு. அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு. ஆகியவை டாப் அறிவிப்புகளாக உள்ளன.
Follow Us