AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் – எப்போது தெரியுமா?

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் மற்றும் தென்காசி இடையே ஜூலை 30, 2026 முதல் ஆகஸ்ட் 15, 2026 வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜூலை 24, 2026 இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் – எப்போது தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Jul 2026 15:00 PM IST

சென்னை, ஜூலை 24 : பயணிகளின் வசதிக்காக தாம்பரம் மற்றும் தென்காசி இடையே ஜூலை 30, 2026 முதல் ஆகஸ்ட் 15, 2026 வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவை தெற்கு ரயில்வே எடுத்துள்ளது. 24 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலுக்கான முன்பதிவு வருகிற ஜூலை 24, 2026 முதல் தொடங்கியுள்ளது. குறிப்பிடத்தக்கது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து கிளம்பும் வண்டி எண் 06135 என்ற சிறப்பு ரயில் ஜூலை 30, 2026, ஆகஸ்ட் 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் 2 முறை இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரம் 2 முறை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் மாலை 3.30 மணிக்கு தென்காசி சென்றடையும்.

இதையும் படிக்க : எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 

அதே போல மறுமார்க்கமாக தென்காசியில் இருந்து ஜூலை 31, 2026, ஆகஸ்ட் 2, 7, 9, 14, 16, 2026 ஆகிய நாட்களில் காலை 5 மணிக்கு இயக்கப்படும். இந்த 06136 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் வாரம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 3.15 தாம்பரத்தை வந்தடையும் என தெரஅகு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : விழுப்புரத்தில் வெடித்த அதிமுக உட்கட்சிப் பூசல்.. இபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சி.வி.சண்முகம்!

முன்பதிவு தொடக்கம்

இந்த சிறப்பு ரயில் 23 பெட்டிகளை கொண்டுள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜூலை 24, 2026 இன்று முதல் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் பயணிப்பதால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பயணிகளும் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் அந்த விழுப்புரம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகளும் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Follow Us