AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.35 கோடி குதிரை பேர வழக்கு.. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!!

Senthil Balaji Appears in Chennai Sessions Court: எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த நிபந்தனை முன்ஜாமீனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிப் பிணைத் தொகையைச் செலுத்தினார்.

ரூ.35 கோடி குதிரை பேர வழக்கு.. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!!
செந்தில் பாலாஜி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Jul 2026 11:14 AM IST

சென்னை, ஜூலை 24: சட்டப்பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பிணைத்தொகை செலுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகத் தனக்கு ரூ.35 கோடி சன்மானம் தருவதாக சிலர் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!

எம்.எல்.ஏ. குதிரை பேர புகார்:

இந்தப் புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இடைத்தரகர்கள் மற்றும் தொடர்பு உடையவர்கள் என இதுவரை 14 பேரைத் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் காவல்துறையினர் தங்களைக் கைது செய்யக்கூடும் என்பதால், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்றம் அளித்த நிபந்தனை முன்ஜாமீன்:

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில் பின்வரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தன. உயர் நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ.25,000 சொந்தப் பிணைப் பத்திரம் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் பிணைப் பிணைப்புச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணி என இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்.

மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!

நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி:

உயர் நீதிமன்றம் அளித்த 15 நாட்கள் கால அவகாசம் நாளையுடன் (ஜூலை 25) முடிவடையும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். முதன்மை அமர்வு நீதிபதி முன் ஆஜரான அவர், நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ.25,000 பிணைத் தொகையையும் நபர் பிணைகளையும் முறையாகச் செலுத்தி முன்ஜாமீன் நடைமுறைகளைப் பூர்த்தி செய்தார். செந்தில் பாலாஜியின் இந்தத் திடீர் நீதிமன்ற வருகை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us