AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!

Thoothukudi Custodial Death: தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாகம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சிறையில் அந்த இளைஞர் மயங்கி விழுந்த வீடியோவை வெளியிட்டு காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!
சிறையில் மயங்கி விழுந்த இளைஞர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Jul 2026 16:38 PM IST

தூத்துக்குடி மாவட்டம், மூதா நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம். இவர், அந்த பகுதியில் உள்ள எஃப். சி. ஐ. குடோன் அருகே சட்டத்துக்கு புறம்பாக மதுபானங்கள் விற்றதாக தென்பாகம் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதுடன் 120 மது பானங்களை பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில், போலீசாரின் விசாரணையின்போது, அவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இதில், காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதன் காரணமாகவே அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில், தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோவை காவல்துறை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அதில், காவல் நிலைய சிறையில் சக கைதிகளுடன் அருணாச்சலம் இருந்துள்ளார்.

சிறையில் இளைஞர் மயங்கி விழும் வீடியோ

அப்போது, திடீரென அருணாச்சலம் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த சக கைதிகள் சத்தமிட்டனர். உடனே, போலீசார் பதற்றம் அடைந்து சிறையில் உள்ளே சென்று அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில், போலீசார் தாக்கியதால் இளைஞர் உயிரிழந்ததாக கூறுவதில் அர்த்தமில்லை. சிறையில் மயங்கி விழுந்தே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். சக கைதிகள் சாதாரணமாக இருக்க இவர் மட்டும் மயங்கி விழுந்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வார இறுதி நாட்கள்.. நாளை முதல் 1,635 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முன்பதிவு செய்வது எப்படி?

அருணாச்சலம் மரண வாக்குமூலம் வீடியோ

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், என்னை காவல் நிலையத்தில் வைத்து 3 காவலர்கள் தாக்கினர். என்னை கைது செய்த போது என்னுடன் வேறு யாரும் இல்லை என்று அந்த வீடியோவில் இளைஞர் அருணாச்சலம் பேசுகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

சமீப காலத்தில் அடுத்தடுத்து 3 மரணங்கள்

நாகர்கோவிலில் சிறையிலும் ஒரு கைதி சிறை காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதற்கு நீதி கேட்டும் அவரது உறவினர்கள் நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம், நிகழ்ந்து சுமார் ஒரு வார காலத்துக்குள் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு லாக்அப் மரணம் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்க: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. “டாஸ்மாக் பணியாளர்களுக்கு ESI மருத்துவக் காப்பீடு!”..

Follow Us