AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடும் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. “புதுகோட்டை தியேட்டரில் திரைக்கு முள்வேலி” என்ன காரணம்!

Aranthangi Suba Theatre : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் திரை முன் முள்வேலி அமைக்கப்பட்டிருந்த சம்பவம் படத்தை பார்க்க வந்த விஜய் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்தம முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடும் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. “புதுகோட்டை தியேட்டரில் திரைக்கு முள்வேலி” என்ன காரணம்!
ஜனநாயகன் திரை முன் முள்வேலி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Jul 2026 14:36 PM IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை பார்ப்பதற்காக விஜயின் ரசிகர்களும், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளும், துறை அமைச்சர்களும் காலையிலேயே தங்கள் பகுதிக்குள்பட்ட தியேட்டர்களில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை பார்ப்பதற்காக சென்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜனநாயகன் படம் திரையிடப்பட்டது. இதில், அறந்தாங்கியில் உள்ள சுபா என்ற தனியார் திரையரங்கிலும் ஜனநாயகன் படம் வெளியிடப்பட்டிருந்தது. முதல் நாள் காட்சி என்பதால் இதனை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் தியேட்டருக்கு வருகை தந்திருந்தனர். அப்போது, தியேட்டரில் உள்ளே சென்ற விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனென்றால், தியேட்டர் திரையின் முன்பு கருவேல மர கிளைகளை வெட்டி தடுப்பு போல தியேட்டர் ஊழியர்கள் அமைத்திருந்தனர்.

தியேட்டர் திரை முன் முள்வேலி அமைப்பு

இது, ரசிகர்கள் மற்றும் இன்றி பொது மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக திரைக்கு அருகில் சென்று ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர். அண்மையில் திரையரங்கில் திரையிடப்பட்ட படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த திரையரங்கில் உள்ள இருக்கைகள், திரை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி சென்றிருந்தனர். இதனை தவிர்க்கும் வகையில், தியேட்டர் நிர்வாகம் கருவேல மர கிளைகளை தடுப்பு போல அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வீதியில் இறங்கிய மாணவர்கள்.. தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்.. தமிழகம் முழுவதும் தீவிரமடைந்த நீட் போராட்டம்!!

விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளானது

இது, திரையரங்கின் சொத்துக்களையும், ரசிகர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த விவகாரம், அறந்தாங்கி பகுதி விஜய் ரசிகர்கள் மற்றும் இன்றி அனைத்து பகுதி ரசிகர்கள் மத்தியிலும் பேசும் பொருளாகி உள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

தடைகளை தாண்டி வெளியான ஜனநாயகன்

ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காத விவகாரம் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவை காரணமாக ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு தள்ளி சென்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகம் திரைப்படம் இன்று வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் திரைப்பட தயாரிப்பு குழு தரப்பில் இருந்து வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்.. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

Follow Us