AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பொளக்கப்போகும் வெயில்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் அவ்வப்போது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பொளக்கப்போகும் வெயில்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை..  பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Jul 2026 13:10 PM IST

ஜூலை 24, 2026: தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூலை 24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 30ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:

ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொடூரம்.. வாய் பேச முடியாத கைதி அடித்துக் கொலை… குற்றப்பின்னணி வார்டில் அதிர்ச்சி!!

இதே நிலை ஜூலை 26ஆம் தேதியும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் பொளக்கப்போகும் வெயில்:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தாலும், பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வருகிறது.

எனவே, அடுத்த சில நாட்களுக்கு வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாகப் பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விழுப்புரத்தில் வெடித்த அதிமுக உட்கட்சிப் பூசல்.. இபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சி.வி.சண்முகம்!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் அவ்வப்போது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us