AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷ் சார் ஷூட்டிங்கில் அப்படிதான்.. அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த விஷயம்!

Anupama Parameswaran About Dhanush: தென்னிந்திய சினிமாவில் லீட் நாயகியாக இருந்துவருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், நடிகர் தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றியும், அவரது திறமை பற்றியும் பேசியுள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

தனுஷ் சார் ஷூட்டிங்கில் அப்படிதான்.. அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த விஷயம்!
அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Sep 2026 08:22 AM IST

மலையாளம் சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் நாயகியாக நடித்துவருபவர் அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran). இவர் கடந்த 2015ம் ஆண்டில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் (Alphonse Puthiran) இயக்கத்தில் பிரேமம் (Premam) என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியிருந்தார். பிரேமம் பட தெலுங்கு ரீமேக்கில் அவர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் தமிழில் இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம்தான் கொடி (Kodi). இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், இயக்குநர் துரை செந்தில்குமார் (Dhurai Senthilkumar) இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு பின் தமிழில் நடித்தாலும், இவருக்கு தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நிறைய வரவேற்புகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அனுபமா பரமேஸ்வரன், அதில் தனுஷுடன் பணியாற்றியது மற்றும் அவர் ஷூட்டிங்கில் எவ்வாறு இருப்பார் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அன்பில் அவன் படத்திற்காக என் பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்தேன் – மேடையில் எமோஷனலான அசோக் செல்வன்!

நடிகர் தனுஷுடன் பணியாற்றியது மற்றும் அவரின் குணம் பற்றி பேசிய அனுபமா பரமேஷ்வரன்:

அந்த பேட்டியில் பேசிய அனுபமா பரமேஷ்வரன், அதில் “தனுஷ் சார் மிகவும் அற்புதமான நடிகர், அவரின் திறமையும் அதிகம். அவர் ஷூட்டிங்கில் ஒருமுறை ஸ்கிரிப்ட் ஒருமுறை பார்த்தால் போதும் உடனே டேக் போகலாம் என என சொல்லிடுவாரு.

இதையும் படிங்க: பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம்… உடைந்து அழுத சாந்தினி – வைரலாகும் வீடியோ

ஆனால நான் அப்படி இல்ல ஒருமுறை பார்த்தாலும், மீண்டும் பார்த்தால்தான் நடிக்க முடியும். அவர் மிகவும் திறமையான நடிகர்” என அதில் கூறியிருந்தார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

தென்னிந்திய சினிமாவில் லீட் நாயாகியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவர் இறுதியாக மரீசீக் என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு பின் தற்போது போகி என்ற படத்திலும் நடித்துவருகிறார். மேலும் புதிய படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us