AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Raaka: ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின்.. கின்னஸ் சாதனை படைத்த ராக்கா படக்குழு!

Raaka Film Sets Guinness World Record: தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர்தான் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பிலும்,இயக்குநர் அட்லீயின் இயக்கத்திலும் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படம்தான் ராக்கா. ஹாலிவுட் ரேஞ்சில் இப்படமானது உருவாகிவரும் நிலையில், இப்படக்குழு உலக கின்னஸில் சாதனை படைத்துள்ளது.

Raaka: ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின்.. கின்னஸ் சாதனை படைத்த ராக்கா படக்குழு!
ராக்கா திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது.Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Sep 2026 20:56 PM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநர் ஷங்கரிடம் (Shankar) பணியாற்றி, பின் ஆர்யாவின் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் இயக்குநர் அட்லீ குமார் (Atlee Kumar). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் இயக்கத்தில் ராஜா ராணி (Raja Rani) திரைப்படம் வெளியாகி ஹிட்டான நிலையில், இப்படத்திற்கு பின் விஜய்யுடன் கிட்டத்தட்ட 3 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ஜவான் (Jawan). இந்த படமானது 2023ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் அட்லீயின் இயக்கத்தில் உலகத்தரத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் ராக்கா (Raaka). இதில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டின் நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.ஒரு வருடத்தை கடந்தும் இப்படமானத்தின் ஷூட்டிங் நிறைவடையவில்லை. அந்த வகையில் தற்போது இந்த திரைப்படமானது உலக கின்னஸ் சாதனை (Guinness World Record) படைத்துள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

உலக கின்னஸ் சாதனை படைத்த ராக்கா படக்குழு:

ராக்கா திரைப்படமானது, ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின் அசைவுகளைப் படம்பிடித்து, நிகழ்நேரத்தில் அதிக நபர்களை அசையாமல் படம்பிடித்ததற்காக ராக்கா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையைக் குறிக்கும் வகையில், திரு. அல்லு அர்ஜுன் மற்றும் திரு. அட்லீ கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றனர். தற்போது இந்த கின்னஸ் சாதனை குறித்த புகைப்படங்கள் மற்றும் புரோமோவை ராக்கா படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பிக்காசோ படம் தனுஷின் அந்த படத்தின் வெற்றியில் பாதியாவது இருக்க வேண்டும் – அபிஷன் ஜீவிந்த்

உலக கின்னஸ் சாதனை ராக்கா படக்குழு படைத்தது குறித்து படக்குழு பதிவு:

இந்த ராக்கா திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் நிலையில், பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையாத நிலையில், படமானது 2028ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us