பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் – மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கிய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் அழைப்பின் பேரில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தது. இந்த விவகாரம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தவறுகளுக்காக மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கிய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் அழைப்பின் பேரில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தது. மோடியின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவித்த மெட்டா, பின்னர் அந்த வீடியோவை மீண்டும் பதிவேற்றியது. இந்த விவகாரம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தவறுகளுக்காக மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட மார்க் ஜுக்கர்பெர்க்
பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்ற காணொளி ஒன்று ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய அரசிடம் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, மெட்டாவின் உலகளாவிய குழுவினர் ஆகஸ்ட் 5, 2026 மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, பிரதமர் மோடியின் காணொளி நீக்கப்பட்டது குறித்து மட்டுமல்லாமல், சமூக ஊடகத் தளங்களில் டீப்ஃபேக் வீடியோக்கள், குழந்தைகளை தவறாக வழிநடத்தும் வீடியோக்கள் மற்றும் ஸ்கேம் சம்பவங்கள் மற்றும் பிற சட்டவிரோத கண்டென்ட்கள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அரசு தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நம்பகமான வட்டாரங்களின்படி, மெட்டா பிரதிநிதிகள் தங்கள் தளங்களில் ஏற்பட்ட செயல்பாட்டுத் தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்.
சமூக ஊடக நிறுவனங்கள் வெறும் இடைத்தரகர்கள் என்று கூறிப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அரசு தெளிவுபடுத்தியது. பயனர்களுக்கு எந்த வகையான உள்ளடக்கம் காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவை அல்காரிதங்களைப் பயன்படுத்துவதால், அதற்கான முழுப் பொறுப்பையும் அவை ஏற்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.
கடந்த ஜூலை 23, 2026 அன்று, பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்ற காணொளி ஒன்று ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. பின்னர் மெட்டா அந்தக் காணொளியை மீண்டும் பதிவேற்றியதுடன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.
இருப்பினும், அந்த விளக்கத்தில் அரசு முழுமையாகத் திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் இது குறித்து மெட்டாவிடம் விளக்கம் கோரியது. குறிப்பாக, குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் வீடியோக்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகளை விரைவாக நீக்குவதை உறுதிசெய்யக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நிறுவனத்தை அக்குழு வலியுறுத்தியது.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், மெட்டாவின் நிர்வாகி ஜோயல் கபிலன் மற்றும் அந்நிறுவனத்தின் பிற உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மெட்டாவின் மிகப்பெரிய மார்க்கெட்களில் ஒன்றாக இந்தியா இருப்பதால், நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அரசு மீண்டும் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.