AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Arnab Cyclone: வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை

இதன் தாக்கத்தால் மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், பிர்பூம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Arnab Cyclone: வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Sep 2026 21:45 PM IST

செப்டம்பர் 22, 2026: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறினால், அதற்கு ‘அர்னாப்’ என பெயரிடப்படும். எனினும், புயல் உருவாகும் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இன்று காலை இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்மேற்கே சுமார் 200 கி.மீ. தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலவியது. கடந்த 6 மணி நேரத்தில் 18 கி.மீ. மட்டுமே நகர்ந்துள்ளது.

செப்டம்பர் 24ஆம் தேதி கரையை கடக்கும் அர்னாப் புயல்:

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரையிலான காலகட்டத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், பிர்பூம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு:

புதன்கிழமை தெற்கு 24 பர்கானாஸ், இரு மேதினிபூர் மாவட்டங்கள், ஜார்கிராம் மற்றும் புருலியா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமை மேதினிபூர் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் திறந்தவெளிகளில் செல்வதைத் தவிர்த்து வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: சோப்பு, ஷாம்பு, பற்பசையில் சைவம், அசைவம் குறிக்கும் அடையாளம் கட்டாயம்! மத்திய அரசின் புதிய விதிமுறை..

ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை:

வடக்கு வங்கத்திலும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை ஜல்பைகுரி, டார்ஜிலிங், அலிபுர்துவார், கலிம்பாங், கூச் பெஹார், வடக்கு தினாஜ்பூர் மற்றும் தெற்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். வெள்ளிக்கிழமை ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவாரில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கக்கடல் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குர்தா, கஞ்சம், ஜகத்சிங்பூர் மற்றும் கஜபதி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow Us