தமிழக பட்ஜெட்.. “Blast Blast” இல்ல “Waste Waste”… மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
DMK leader MK Stalin Criticizes Budget : தமிழக வெற்றிக் கழக அரசின் நிதி நிலை அறிக்கை Blast Blast இல்ல Waste Waste என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பாணியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் ரீல்ஸ் சி. எம்.- க்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் BLAST BLAST- ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு WASTE WASTE- என சொல்லும் படி தான் உள்ளது. அது மட்டும் இன்றி திராவிட முன்னேற்ற கழக அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷன் பட்ஜெட் ஆகவும் உள்ளது.
பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமில்லை
இதனை மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகளின் பிரச்சனை, மின் கட்டண குளறுபடி பிரச்சனை, விலைவாசி உயர்வு பிரச்சினை என எவை பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்துக்கு தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்காத பட்ஜெட்டாக உள்ளது. அது மட்டும் இன்றி மகளிருக்கான ரூ.2,500 உரிமைத் தொகை, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம், ஓராண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் எதை பற்றியும் பட்ஜெட்டில் மூச்சு விடவில்லை.
மேலும் படிக்க: Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!




தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க்
மொத்தத்தில் சொந்தமாகவும் யோசிக்காத மற்றும் சொன்னதை எதையும் செய்யாத, சுரத்தில்லாத- புஸ்வான பட்ஜெட் ஆகவே ரீல்ஸ் அரசின் முதல் பட்ஜெட் அமைந்துள்ளது இன்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே போல, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்: தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், இன்று வெளியான பட்ஜெட்டுக்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க் கொடுக்கலாம்.
வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவர்
தமிழக வெற்றிக் கழக அரசின் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்று தகவல் இல்லை. மாற்றம் மாற்றம் எனக் கூறும் தமிழக வெற்றிக் கழக அரசு திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தவெக அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை.. எடப்பாடி கடும் விமர்சனம்!