AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்.8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!

Tamil Nadu Legislative Assembly Session : தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் செப்டம்பர் 8- ஆம் தேதி வரை நடைபெறுவதாக சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார். அவர் கூறியவதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்.8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!
ஜேசிடி பிரபாகர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Aug 2026 14:11 PM IST

தமிழக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) தாக்கல் செய்தார். சுமார் 2.5 மணி நேரம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், கூட்டத்தை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஜே. சி. டி. உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அமைதியாக முறையில் நடைபெற்றதற்கு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்மை துறையின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன. முன்னதாக இன்று காலை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான பொது விவாதம் மற்றும் பதிவு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு, துறை வாரியான மானிய கோரிக்கைகள் பேரவையில் முன்மொழிபட்டு, அதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

  • 6- ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்.
  • 7- ஆம் தேதி மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், திரை பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு.
  • 8 மற்றும் 9- ஆம் தேதி சட்டப்பேரவை விடுமுறை.
  • 10- ஆம் தேதி திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் திருத்திய வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம்.
  • 11- ஆம் தேதி பொது விவாதம் தொடரும்.
  • 12- ஆம் தேதி பொது விவாதம் மற்றும் பதிலுரை.
  • 13- ஆம் தேதி முதல் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி, ஒவ்வொரு நாளும் பேரவை காலை 9:30 மணிக்கு கூடும்.
  • இதனிடையே, சுதந்திர தினம் வருவதால் 13, 14, 15 ஆகிய தினங்கள் பேரவை நிகழ்வு கிடையாது. அதன்படி செப்டம்பர் 8- ஆம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெறும்.

இதனிடையே மாலையில் தேவையெனில் 4:30 மணிக்கு பேரவை கூடி 6 மணி வரை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம். எந்த மானிய கோரிக்கைகள் நடைபெறுகிறதோ அந்த மானிய கோரிக்கைகள் தொடர்பாக கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டும். இதை விடுத்து விட்டு வேறு மானிய கோரிக்கைகள் தொடர்பாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Follow Us