தவெக அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை.. எடப்பாடி கடும் விமர்சனம்!
T. V. K. Government Budget : தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பன உள்ளிட்ட கருத்துக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர் .
தமிழக அரசின் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி தீர்ப்பை இவர்களால் காப்பாற்ற முடியுமா. கடனை அடைக்காமல் புதிய திட்டத்திற்கு எப்படி நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். நிதி கசிவு இருக்கிறது என்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியிலும் இதயத்தையும் சொன்னார்கள் இப்போதும் இதையே சொல்கிறார்கள். தமிழக வெற்றிக்கழக அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை ரூல்ஸ் வெளியிடுவதை அவர்களுக்கு வேலையாக உள்ளது மகளிர் உரிமைத் தொகை பயிர் கடன் ரத்து விலையில்லா சிலிண்டர் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறவில்லை.
தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க வேண்டும்
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த குறுகிய காலத்தில் ரூ.20,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ரூ.10.98 லட்சம் கோடி கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள். நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு குழு அமைத்தால் போதாது. தாலிக்கு தங்கம், விலையில்லா கறவை மாடுகள் போன்ற திட்டங்கள் அதிமுகவின் திட்டங்கள் என்று தெரிவித்தார். இதே போல, தேமுதிக பொது செயலாளர், எம்எல்ஏவும் ஆன பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: புதிய தொழிற்சாலைகள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. முழு பயிர் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் இல்லை. 10 லட்சம் கோடிக்கு மேல் தமிழகம் கடனில் இருப்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.
மின்சார பேருந்து இயக்கம் வரவேற்கத்தக்கது
இந்த கடனை குறைப்பதற்காக எந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை. முழு பயிர் கடன் தள்ளுபடி இல்லாதது பெரும் வருத்தத்துக்குரியதாகும். நதிகள் மற்றும் சாலைகள் சீரமைப்பு முக்கியத்துவம் ஆகும். மின் கட்டண உயர்வு, சோலார் சிஸ்டம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். மொத்தத்தில் தமிழகத்தின் கடன் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.