Tamil Nadu Animal Husbandry Department Budget 2026 : கால்நடை காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
Tamil Nadu Budget Animal Husbandry Department allocation : தமிழகத்தில் கால்நடைகளை காப்போம் திட்டத்திற்கு ரூ. 31 கோடி ஒதுக்கீடு செய்து நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். இன்னும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன .
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று புதன் கிழமை தொடங்கியது. இதில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பல்வேறு துறைகளுக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதில், கால்நடை துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். அதன்படி,கால்நடை காப்போம் திட்டத்திற்கு ரூ. 31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ. 23 ஆயிரத்து 357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 122 கோடியில் கால்நடை மருத்துவத்திற்கு தரமான சேவை வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இதே போல, கால்நடை மற்றும் பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 4,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக ரூ. 7.432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 30,000 பெண்களுக்கு தலா 5 ஆண்டுகள் வழங்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 9,300 கோடி பாதுகாப்பான சாலைகள் அமைப்பதை உறுதி செய்ய தனி இயக்கம் அமைக்கப்படும். முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்புறத் திட்டத்திற்கு ரூ. 217 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 500 கோடியில் ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். ரூ. ஆயிரத்து 543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் உருவாக்கப்படும். திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளி தொழில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
ஜவுளி தொழிலுக்கான ரூ. 60 கோடியில் தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. பொது ஈ.வி. சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் பொது ஈபி சார்ஜிங் நிலையங்கள் ரூ. 50 கோடியில் அமைக்கப்பட உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் ஈ. வி. சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் அளிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. எரிசக்தி துறை நிதி ஒதுக்கீடாக ரூ. 15 ஆயிரத்து 828 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)