AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை விசாரணைக்கு வரும் முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு – நேரில் ஆஜராவாரா?

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 15, 2026 அன்று விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7 அன்று ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை விசாரணைக்கு வரும் முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு – நேரில் ஆஜராவாரா?
முதல்வர் விஜய்யின் வழக்கு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Aug 2026 16:50 PM IST

சென்னை, ஆகஸ்ட் 6 : செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7, 2026 நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 15, 2026 அன்று விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7, 2026 நாளைக்கு ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து முதல்வர் விஜய் ஆஜராவாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

நாளை விசாரணைக்கு வரும் முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு

விஜய் – சங்கீதா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் முதல்வர் விஜய்யுடனான கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி, சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தேர்தலுக்கு சற்று முன்னதாக பிப்ரவரி மாதம் வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!

இந்த நிலையில் இந்த விவாகரத்து வழக்கு கடந்த ஏப்ரல் 20, 2026 அன்று விசாரணைக்கு வந்தபோது இருவரும் யாரும் ஆஜராகததால் கடந்த ஜூன் 15, 2026 வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி, இந்த ஜூன் 15 விசாரணையின் போது முதல்வர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. இருப்பினும் இருவரும் ஆஜராகவில்லை.

நேரில் ஆஜராவார்களா?

இந்த நிலையில் இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை வருகிற ஆகஸ்ட் 7, 2026 தேதிக்கு நீதிபதி வைத்தார். ஒத்திவைத்தார். அதனடிப்படையில் முதலமைச்சர் விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

இருதரப்பினரும் பிரபலங்கள் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரியுள்ள நிலையில் இருவரும் காணொளி காட்சி மூலமாக ஆஜராக வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக அவர்களது இணையதள முகவரி நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் நாளை முக்கிய தீர்ப்பு வெளியாகலாம் என்பதால் தமிழகமே இந்த வழக்கை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

Follow Us