AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Budget 2026: பட்ஜெட்டில் இடம்பெற்ற 8 ‘வெற்றி’ திட்டங்கள்… இதை கவனிச்சிங்களா?

TN Budget 2026 Highlights: குறிப்பாக, பெண்கள் பெரிதும் எதிர்பார்த்த அண்ணனின் சீர் திட்டம் - அதாவது திருமணமாகும் தகுதியுள்ள பெண்களுக்கு 8 கிராம் (1 சவரன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget 2026: பட்ஜெட்டில் இடம்பெற்ற 8 ‘வெற்றி’ திட்டங்கள்… இதை கவனிச்சிங்களா?
முதல்வர் விஜய், அமைச்சர் மரிய வில்சன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Aug 2026 06:39 AM IST

சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026–2027ஆம் நிதியாண்டுக்கான மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் நேற்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மகளிர் நலன், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு பல முக்கியத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க: Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!

பட்ஜெட்டில் முத்திரை பதிக்கும் 8 ‘வெற்றி’ திட்டங்கள்:

மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்கோடு ‘வெற்றி’ என்ற பெயரில் 8 சிறப்புத் திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்க இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்.

வெற்றி திறன் பயிற்சி திட்டம்: கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்த நவீன தொழிற்பயிற்சிகள்.

வெற்றி தமிழகம் தொலைநோக்கு திட்டம்: மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல உத்தி சார்ந்த நடவடிக்கை.

வெற்றி தொழில் முனைவோர் திட்டம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரை தொழிலதிபர்களாக மாற்ற சிறப்பு நிதியுதவி.

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்: கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100% அரசு மானியத்தில் ஆடுகள் வழங்கி வாழ்வாதாரம் அளித்தல்.

வெற்றி வீடு திட்டம்: குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு எளிய முறையில் பாதுகாப்பான வீட்டு வசதி.

வெற்றி 150 திட்டம்: கிராமப்புற வேலை உறுதித் திட்டம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல்.

TN வெற்றி திட்டம்: கிராமப்புறங்களில் சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்புகளைத் தரம் உயர்த்துதல் ஆகிய 8 வெற்றித் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க : சூரிய ஒளி மின் அமைப்புக்கு பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்.. பட்ஜெட்டில் வந்த சூப்பர் அறிவிப்பு!

சமூக நலன், மகளிர் மற்றும் சுகாதார மேம்பாடு:

அண்ணனின் சீர் திட்டம்: திருமணமாகும் தகுதியுள்ள பெண்களுக்கு 8 கிராம் (1 சவரன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு  ரூ.560 கோடி ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வுத் துறை: சுகாதாரத் துறைக்கு மொத்தம் ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாய் கேர்: கர்ப்பிணிகளுக்கு இலவச உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பிற்காகச் சிறப்புத் தாய்மை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் (ரூ.23 கோடி) ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow Us