சூரிய ஒளி மின் அமைப்புக்கு பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்.. பட்ஜெட்டில் வந்த சூப்பர் அறிவிப்பு!
1 Lakh Rupee Subsidy For Solar Panel Set Up | 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான தமிநாடு பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், சோலார் அமைப்புக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 05 : 2026 – 2027 ஆம் நியாண்டுக்கான தமிநாடு பட்ஜெட் (2026 -2027 Tamil Nadu Budget) இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் அறிவித்தார். இந்த நிலையில், சூரிய ஒளி மின் அமைப்புக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், சூரிய ஒளி மின் அமைப்பு குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின்போது தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் அந்த திட்டங்களில் சில இன்னும் செயல்பட்டு வராமல் உள்ளது.
இதையும் படிங்க : தவெக அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை.. எடப்பாடி கடும் விமர்சனம்!
இந்த நிலையில், தேர்தல் அறிவிப்புகள் குறித்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், தாய் மாமன் தங்க மோதிரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மரிய வில்சன் திட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை அறிவித்தார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ஒன்று கவனம் பெற்றுள்ளது.
சூரிய ஒளி மின் அமைப்புக்கு ரூ.1 லட்சம் மானியம்
வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் வில்சன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சூரிய மின்சார பயன்பாட்டை அதிகரித்து, மின்சார செலவை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : சென்னை கூவத்தில் படகு சவாரி.. சுத்தப்படுத்த சர்வதேச டெண்டர்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
அதுமட்டுமன்றி, சென்னையில் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.