Gold Price : ஒரே நாளில் ரூ.1,600 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!
Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 12 : சென்னையில் (Chennai) நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (நவம்பர் 12, 2026) தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.1,600 சரிந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையோ (Silver Price) மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம், வெள்ளி
புவிசார் பதற்றம், பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு என இந்த ஆண்டு தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதாவது, ஒரு சில நாட்கள் தொடர் சரிவை சந்திக்கும் தங்கம், அதன் பிறகு தொடர் உயர்வை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : SIP தெரியும், அது என்ன SIF.. பணக்காரர்களின் முக்கிய டார்கெட் இதுதான்!
மீண்டும் ரூ.12,000-க்கு வந்த தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கம், அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்தது. இருப்பினும் பல மாதங்களாக ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,000-க்கு கீழ் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை மீண்டும் ரூ.13,000-க்கு கீழ் வந்துள்ளது.
இதையும் படிங்க : எகிறும் பட்ஜெட்.. திருமண செலவை அதிகரிக்கும் காரணங்கள்.. இந்த விஷயங்களில் கவனமாக இருக்கணும்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,980-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.