SIP தெரியும், அது என்ன SIF.. பணக்காரர்களின் முக்கிய டார்கெட் இதுதான்!
Specialised Investment Funds | சமீப காலமாக இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு திட்டம் தான் எஸ்ஐபி. இந்த நிலையில், எஸ்ஐஎஃப் என ஒரு திட்டம் உள்ளது. இந்த நிலையில், அது என்ன திட்டம், அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் தான் நிதி பாதுகாப்பை பெற முடியும் என்பதால் பலரும் தாங்கம் சம்பாதிக்கும் பணத்தை ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையி, சமீப காலமாக ஏராளமான மக்கள் முதலீடு செய்யும் ஒரு முக்கிய திட்டமாக உள்ளதுதான் எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan). இந்த திட்டத்தில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.
சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் பரவலாக உள்ளது. ஆனால், எஸ்ஐஎஃப் (SIF – Specialised Investment Funds) என ஒரு திட்டம் உள்ளது. அது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இந்த நிலையில், அது என்ன திட்டம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Specialised Investment Funds என்றால் என்ன?
பெரிய பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களின் கைகளில் இருக்கும் பணத்தை ரொடேட் செய்வதற்காகவும், பெரிய பணக்காரர்களின் குடும்ப முதலீட்டு அலுவகங்களின் முதலீட்டை ஈர்க்கவும் உருவாக்கப்பட்ட திட்டம் HN1. ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புடைய முதலீட்டாளர்கள் என இந்தியாவில் அதிக பணம் வைத்துள்ள நபர்கள் விரும்பி முதலீடு செய்யும் திட்டமாக இந்த எஸ்பிஎஃப் உள்ளது.




இதையும் படிங்க : 18K, 22K மற்றும் 24K.. இவை நான்கில் எது சிறந்தது.. எது உண்மையான தங்கம்!
2025-ல் செபி உருவாக்கிய முதலீட்டு பிரிவு
2025 ஆம் ஆண்டு செபி உருவாக்கிய முதலீட்டு பிரிவு தான் எஸ்ஐஎஃப். இந்த திட்டம் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Funds) முதலீடுகளுக்கும், பெரிய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் (Portfolio Management Service) மத்தியில் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் சாதாரண குடிமக்கள் முதலீடு செய்வது சற்று கடினமானது தான். காரணம், இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : சமோசா மூலம் உருவான சாம்ராஜ்யம்.. ரூ.200 கோடிக்கு அதிபதியான தம்பதி!
விரும்பத்தில் அடிப்படையில் முதலீடு செய்யலாம்
திட்டத்தை அசர்ட் மேனேஜ்மென்ட் (Asset Management) நிறுவனம் தான் நிர்வாகம் செய்கிறது. இந்த திட்டம் பெரும் பணக்காரர்கள் மற்றும் பெரிய அளவிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏதுவாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்களது சூழல் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப நீண்ட காலம் அல்லது குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது,.