AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

18K, 22K மற்றும் 24K.. இவை நான்கில் எது சிறந்தது.. எது உண்மையான தங்கம்!

Which Is Best and Pure Gold | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் குறையவில்லை. இந்த நிலையில், எந்த காரட் தங்கம் சிறந்தது என பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2026 01:54 AM IST
இந்தியர்களின் மிக முக்கிய முதலீடாக தங்கம் உள்ளது. கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் அதனை தங்கத்தில் முதலீடு செய்வது ஏராளமான இந்தியர்களின் பழக்கமாக உள்ளது. எனவே தான் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் தங்கத்தை தேர்வு செய்து அதில் முதலீடு செய்கின்றனர்.

1 / 5
தங்கம் விலை எவ்வளவு தான் உயர்வை சந்தித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் மட்டும் இந்தியர்கள் மத்தியில் மாறாமல் உள்ளது. தங்கம் 18 காரட், 22 காரட் மற்றும் 24 காரட் என மூன்று ரகங்களில் உள்ளது. இவை மூன்றில் எது சிறந்த தங்கம், எதில் முதலீடு செய்வது சிறந்தது என தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது. 

2 / 5
18 காரட் தங்கம் 18 பாகம் தூய தங்கம் மற்றும் 6 பாகம் அதாவது 25 சதவீதம் பிற உலோகங்களால் செய்யப்பட்டது ஆகும். இந்த தங்கம் 22 காரட்டை விடவும் சற்று அதிக உறுதியானதாக இருக்கும். வைர நகைகள், கற்கள் பதித்த நகைகள், ஒயிட் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்த 18 காரட் தங்கம் தான் பயன்படுத்தப்படுகிறது.

3 / 5
18 காரட் தங்கத்து அடுத்ததாக உள்ளதுதான் 22 காரட் தங்கம். அதாவது, இந்த 22 காரட் தங்கத்தில் உள்ள மொத்த 24 பாகங்களில் 22 பாகங்கள் தூய தங்கமும் மீதமுள்ள 2 பாகங்கள் பிற உலோகங்களும் இருக்கும். இதன் காரணமாக தான் இந்த தங்கத்திற்கு 22 காரட் என பெயர் உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் இந்த தங்கத்தில் தான் முதலீடு செய்வர். இதனை தான் 916 எனவும் அழைப்பர்.

4 / 5
தங்கத்தின் வகைகளிலேயே அதிக மதிப்பு கொண்டதுதான் 24 காரட் தங்கம். இந்த தங்கத்தில் மொத்தமுள்ள 24 பாகங்களில் 24 பாங்களுமே தூய்மையான தங்கமாக தான் இருக்கும். இது 22 காரட் தங்கத்தை விடவும் சற்று அதிக விலை கொண்டதாக இருக்கும். பெரிய முதலீட்டாளர்கள் இந்த 24 காரட் மீதுதான் முதலீடு செய்வர்.

5 / 5
Follow Us