AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்போது தொடங்கும் தெரியுமா? முழு விவரம்

Pongal 2027 Train Ticket Booking : இன்னும் 2 மாதங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், மீண்டும் ஊருக்கு செல்ல அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். பொங்கல் பண்டிகை வருகிற 2027 ஜனவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்போது தொடங்கும் தெரியுமா? முழு விவரம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Nov 2026 13:42 PM IST

சென்னை, நவம்பர் 10 : ஒருவழியாக தீபாவளி பண்டிகை முடிந்து விட்டது. ஊரில் பட்டாசு புத்தாடையுடன் தீபாவளி கொண்டாடிய அனைவரும் மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருக்கிறார்கள். இன்னும் 2 மாதங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், மீண்டும் ஊருக்கு செல்ல அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். பொங்கல் பண்டிகை (Pongal) வருகிற 2027 ஜனவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு!

தீபாவளியைப் போலவே பொங்கல் பண்டிகையின் போது 3, 4 நாட்கள் விடுமுறை வரும் என்பதால் சென்னையில் படிப்பு மற்றும் வேலைக்காக தங்கியிருக்கும் மக்கள் ஊருக்கு செல்வது வழக்கம்,. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கப்படவுள்ளதாக தெர்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடைசி நேரத்தில் ஊருக்கு செல்ல டிக்கெட் கிடைக்காமல் திணறுவதை தவிர்க்க முன்பே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

இதையும் படிக்க : சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி வேட்டை.. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 222 பேர் பிடிப்பு.. 36 பேர் கைது!!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் பணி செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக நீண்ட தூரப் பயணத்திற்கு பெரும்பாலானோர் ரயிலையே பயணிக்கிறார்கள். மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் ரயிலில் மிகக் குறைந்த கட்டணத்தில் குடும்பத்துடன் வசதியாக பயணிக்க முடியும் என்பதால் பலரது ரயிலாகவே இருக்கிறது. அப்படி ரயில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது பதிய விதி.

முன்பதிவு எப்போது தொடங்கும்?

இந்த நிலையில் 2-27 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது. 14ஆம் தேதி போகிப் பண்டிகை வருகிறது. ஜனவரி 16, 2026 மாட்டுப்பொங்கல், ஜனவரி 17, 2026 காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என தொடர் விடுமுறை கிடைக்கும்.

இதனையடுத்து ஜன. 13, 2027 அன்று பயணம் செய்ய விரும்புவோர் நவம்பர் 14, 2026 சனிக்கிழமையும், ஜனவரி 14, 2026 தேதி வியாழக்கிழமை பயணம் செய்ய விரும்புவோர் நவம்பர் 15, 2026 ஞாயிற்றுக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த 2026 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை ஞாயிறன்று வந்தது போல, அடுத்த 20274 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி காணும் பொங்கல் வருகிறது.

இதையும் படிக்க : பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இதனையடுத்து 2027 ஜனவரி 18 ஆம் தேதி ஊர் திரும்ப வேண்டும் என்றால் நவம்பர் 19, 2026, ஜனவரி 19, 2027 பயணிக்க நவம்பர் 20, 2026 டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிய வந்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிகள் வழியாகவோ அல்லது நேரில் டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.

Follow Us