AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு.. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து!

Mettur dam water level update: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் சீராக அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு.. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து!
மேட்டூர் அணை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Nov 2026 11:16 AM IST

சென்னை, நவ.10: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இதன் நேரடித் தாக்கமாக, தமிழகத்தின் முக்கிய நீராதாரமாகவும் காவிரி டெல்டா பாசனத்தின் உயிர்நாடியாகவும் விளங்கும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக அதிகரித்து வருவதுடன், விவசாயப் பணிகளுக்கும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் இந்த மழை பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: தவெக அரசின் ஆறு மாத கால ஆட்சி நிறைவு.. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களும் நிர்வாக மாற்றங்களும்!!

அணையின் நீர்வரத்து அதிகரிப்பும்:

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து உயர்ந்து வருவதால் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்வரத்து மற்றும் நீர்மட்டத்தைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருவது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீர் இருப்பு, பாசனத் தேவைகளின் நிலவரம்:

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியைக் கடந்து நிலையாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு சுமார் 25 டி.எம்.சி-யை எட்டியுள்ளதுடன், டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவானது பாசனத்திற்காகத் திறக்கப்படும் அளவைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதால், நீர் இருப்புச் சரிவிலிருந்து மீண்டு படிப்படியாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “வரலாற்று சாதனைக்கு தயாராகும் தமிழ்நாடு!”.. குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் ராக்கெட் லான்ச்!

விவசாயிகளின் எதிர்பார்ப்பு:

தற்போதைய சூழலில் மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து மற்றும் அணையின் நீர்மட்டம் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், சம்பா சாகுபடிப் பணிகளுக்குத் தேவையான முழுமையான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து மழை பெய்ய வேண்டிய அவசியமுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் விவசாயப் பணிகள் மற்றும் முதிர்ச்சி அடைந்துவரும் பயிர்களுக்குத் தங்குதடையின்றி தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் நீர்ப்பிடிப்புப் பகுதி நிலவரங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Follow Us