AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

TN Police Special Relief : காவல்துறையினரின் தியாகத்தைப் போற்றும் வகையில் ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்குவதற்கெனத் தனியான நிதி ஏற்பாட்டை உருவாக்கலாம் என்று காவல்துறை தலைமை இயக்குநர் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார். தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம்..  தமிழக அரசு அரசாணை வெளியீடு!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Nov 2026 11:15 AM IST

சென்னை, நவம்பர் 10 : தமிழகத்தில் பணியின்போது உயிரிழக்கும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு (TN Government) வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு நிவாரணம் வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும். இந்த நிவாரண நிதியை நிர்வகிக்கும் பொறுப்பைக் காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். சில நேரங்களில் பணியின் போது காவல்துறையினர் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இதையும் படிக்க : உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் – ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி – ராமநாதபுரத்தில் பரபரப்பு

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியின்போது உயிர் தியாகம் செய்யும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைபாதுகாக்கும் பணியின் போது உயிர்த் தியாகம் செய்யும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை சிறப்பு நிவாரணமாக வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்தும் வழிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன. வழக்கமாக, சட்டம் ஒழுங்கு பணியின்போது உயிரிழக்கும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய மக்களால் செம ட்ராஃபிக்! கிளாம்பாக்கம், தாம்பரத்தில் மக்கள் கூட்டம்!!

இந்த நிலையில், காவல்துறையினரின் தியாகத்தைப் போற்றும் வகையில் ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்குவதற்கெனத் தனியான நிதி ஏற்பாட்டை உருவாக்கலாம் என்று காவல்துறை தலைமை இயக்குநர் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, காவல் பணியாளர் நல நிதியின் கீழ் சிறப்பு நிவாரணத்திற்கான நிதியை வழங்கும் அமைப்பை உருவாக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிவாரணத்திற்கான நிதியை காவல்துறை நல நிதிக் கட்டமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us